SBI Recruitment 2023 : வங்கியில் வேலைவாய்ப்பு | 8,283 காலிப்பணியிடங்கள்

SBI Recruitment 2023 : வங்கிகளில் முதன்மையான வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனைத் துறையில் காலியாக உள்ள 8,283 ஜூனியர் அசோசியேட்ஸ் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து இணையதளம் மூலம் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

SBI Recruitment 2023 - பணியிட விவரங்கள்

நிறுவனம்: Bharath State Bank

பதவி: ஜூனியர் அசோசியேட் (Juniro Associate), பணியிடம் – 8,283 

தகுதி: இந்தப் பதவிக்கு (SBI Recruitment 2023) விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பணிக்கு (SBI Recruitment 2023) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 20 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது தளர்வுகள் அளிக்கப்படும்.

மாத சம்பளம்: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.17,900 முதல் ரூ.47,920 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு ஜனவரி 2024லும், முதன்மைத் தேர்வு பிப்ரவரி 2024லும் நடைபெறும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடைபெறும். தமிழகத்தில் சென்னை, திருச்சி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, சேலம் ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.     

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.bank.sbi/careers என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு, அதை பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக வைத்திருக்கவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07/12/2023.

Latest Slideshows

Leave a Reply