SBI SCO Recruitment 2024 : ரூ.93000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank Of India) வங்கியில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள சிறப்பு கேடர் அதிகாரி (Specialist Cadre Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு (SBI SCO Recruitment 2024) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு மொத்தம் 800 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

SBI SCO Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இந்த சிறப்பு கேடர் அதிகாரி (SCO) பதவிக்கு மொத்தம் 800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இந்த சிறப்பு கேடர் அதிகாரி (Specialist Cadre Officer) பதவிக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் BE, B.Tech, MCA, M.Tech, M.Sc ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2-5 ஆண்டுகள் வரை பணி முன்அனுபவம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.       

  3. வயதுத் தகுதி (Age) : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இந்த சிறப்பு கேடர் அதிகாரி (Specialist Cadre Officer) பதவிக்கு 25 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

  4. சம்பளம் (Salary) : இந்த சிறப்பு கேடர் அதிகாரி (Specialist Cadre Officer) பதவிக்கு (SBI SCO Recruitment 2024) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.93,960/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இந்த சிறப்பு கேடர் அதிகாரி (Specialist Cadre Officer) பதவிக்கு எழுத்துத் தேர்வு (Written Exam) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : எஸ்பிஐ வங்கியில் இந்த சிறப்பு கேடர் அதிகாரி (SCO) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.sbi.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  7. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : எஸ்பிஐ வங்கியில் இந்த சிறப்பு கேடர் அதிகாரி (Specialist Cadre Officer) பதவிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   

  8. விண்ணப்பிக்க கடைசி தேதி (Application Last Date) : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இந்த சிறப்பு கேடர் அதிகாரி (Specialist Cadre Officer) பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 04.10.2024 ஆகும்.

Latest Slideshows

Leave a Reply