SBI SO Recruitment 2024 : எஸ்பிஐ வங்கியில் ரூ.93,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் (SBI) வங்கி சிறப்பு அதிகாரி Specialist Officer (SO) பணியிடங்களை (SBI SO Recruitment 2024) நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மொத்தம் 1511 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வங்கி சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

SBI SO Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்தியா முழுவதும் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளைகளில் வங்கி சிறப்பு அதிகாரி Specialist Officer (SO) பணியிடங்களுக்கு மொத்தம் 1511 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த வங்கி சிறப்பு அதிகாரி Specialist Officer (SO) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு (UG) முடித்திருக்க வேண்டும்.

  3. வயதுத் தகுதி (Age) : இந்த வங்கி சிறப்பு அதிகாரி Specialist Officer (SO) பணியிடங்களுக்கு 25 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சம்பளம் (Salary) : இந்த வங்கி சிறப்பு அதிகாரி Specialist Officer (SO) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.64,820/- முதல் ரூ.93,960/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த வங்கி சிறப்பு அதிகாரி Specialist Officer (SO) பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக முதலில் எழுத்து தேர்வு நடைபெறும். இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள். இவை இரண்டிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  6. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த வங்கி சிறப்பு அதிகாரி Specialist Officer (SO) பணியிடங்களுக்கு தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.750 செலுத்த வேண்டும். மேலும் SC/ST போன்ற பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.

  7. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த வங்கி சிறப்பு அதிகாரி Specialist Officer (SO) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
  1. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்த வங்கி சிறப்பு அதிகாரி Specialist Officer (SO) பணியிடங்களுக்கு (SBI SO Recruitment 2024) விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 04.10.2024 ஆகும்.

Latest Slideshows

Leave a Reply