Scientists Design New Spacesuit : முதல் முறையாக சிறுநீரை குடிநீராக மாற்றும் "ஸ்பேஸ்சூட்"

அறிவியல் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு எல்லையே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் விஞ்ஞானிகள் ஒரு முன்மாதிரி விண்வெளி உடையை (Scientists Design New Spacesuit) தற்போது உருவாக்கியுள்ளனர். விண்வெளி வீரர்கள் நீண்ட தூரம் விண்வெளி நடைப் பயணங்கள் செய்ய உதவும் வகையில் அவர்களின் சிறுநீரை குடிநீராக மறுசுழற்சி செய்யக்கூடிய விண்வெளி உடையை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். வியர்வை மற்றும் சிறுநீர் கழிப்பதன் மூலம் உடலின் ஈரப்பதத்தை உறிஞ்சி அதை மீண்டும் குடிநீராக மாற்றும் வகையில் முழு உடல் ‘ஸ்பேஸ்சூட்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ‘ஸ்பேஸ்சூட்’ டூன் என்ற அறிவியல் சீரிஸில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விண்வெளி வீரர்களின் கழுத்தில் டியூப் இருக்கும். அதன் மூலம் அவர்கள் இந்த தண்ணீரை குடிக்கலாம். விண்வெளியில் நீண்ட காலம் அவர்கள் இருப்பதற்கு இந்த குடிநீர் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் விண்வெளி மருத்துவம் மற்றும் கொள்கை ஆராய்ச்சியாளரும் புதிய விண்வெளி உடையின் இணை வடிவமைப்பாளருமான சோபியா எட்லின் அவர்கள் “நிஜ வாழ்க்கையில் ‘ஸ்பேஸ்சூட்’ உருவாக்குவது எப்போதுமே எனக்கு ஒரு கனவாகவே இருந்தது” என்றார். இந்த புதிய ‘ஸ்பேஸ்சூட்’ உடையானது நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்கு 2030 ஆம் ஆண்டுக்கு முன் இதைப் பயன்படுத்த முடியும் என்று சூட்-ன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இருக்கும் ஸ்பேஸ்சூட்களில் வெறும் ஒரு லிட்டர் தண்ணீரை மட்டுமே கையாளக்கூடிய பைகள் உள்ளன. இதனால் விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் சந்திர விண்வெளி நடைப்பயணங்கள் செல்வதைக் கட்டுப்படுத்துகிறது. இந்த நடைப் பயணங்கள் 10 மணிநேரம் நீடிக்கும் சில நேரங்களில் அவசரகாலத்தில் 24 மணிநேரம் வரை கூட நீடிக்கும் என எட்லின் தி கார்டியன் கூறினார். விண்வெளி வீரர்களுக்கு அதிகபட்சமாக உறிஞ்சக்கூடிய ஆடையான (MAG) 1970-களில் இருந்து விண்வெளி உடைகளில் பயன்பாட்டில் உள்ள கழிவு மேலாண்மை அமைப்பிலும் சிக்கல்கள் உள்ளன. தற்போது இருக்கும் விண்வெளி உடை பற்றி பல புகார்கள் எழுந்துள்ளது. சுகாதராமின்மை மற்றும் டயப்பராக இருக்கும் (MAG) சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) ஏற்படுவதாக விண்வெளி வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Scientists Design New Spacesuit :

இந்த புதிய ஸ்பேஸ்சூட்டில் சிறுநீர் கழிப்பதற்கு ஏதுவதாக சிலிகான் சேகரிப்பு கோப்பை (பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வெவ்வேறு வடிவம் மற்றும் அளவு கொண்டது) வைக்கப்பட்டுள்ளது. கசிவு இல்லை என்பதை உறுதிசெய்வதற்கு பல அடுக்கு நெகிழ்வான துணியால் செய்யப்பட்ட ஒரு உள்ளாடைக்குள் உள்ளது. சிறுநீர் பகுதியில் பொருத்தப்படும் கப் ஒரு வேக்கம் பம்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இது விண்வெளி வீரர் சிறுநீர் கழிக்கத் தொடங்கியவுடன் தானாகவே இயங்கும் செயல்முறையுடன் வடிவமைக்கப்படும். சிறுநீர் ஒருமுறை சேகரிக்கப்பட்ட பிறகு உடனே சிறுநீர் வடிகட்டுதல் முறைக்கு மாற்றப்படுகிறது. அங்கு 87% திறனுடன் சுத்தமான குடிநீராக மறுசுழற்சி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சிறுநீரை வடிகட்டுதலில் இரண்டு படி நிலைகள் உள்ளன. முதல் படிநிலை Reverse Osmosis செய்யப்படும். பிறகு ஒரு பம்ப் பயன்படுத்தி இந்த தண்ணீரில் உள்ள உப்பு அகற்றப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உட்கொள்வதற்காக சூட் பானம் பையில் செலுத்துவதற்கு முன் அது எலக்ட்ரோலைட்டுகளில் செறிவூட்டப்படுகிறது. 500 மில்லி சிறுநீரை சேகரித்து சுத்திகரிப்பதற்கு தேவையான முழு செயல்முறை ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும் என புதிய விண்வெளி உடையை (Scientists Design New Spacesuit) உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply