Semi Final Race : இன்னும் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது ஆப்கானிஸ்தான் அணி

லக்னோ :

7 போட்டிகள் முடிவில் உலக கோப்பை புள்ளிப்பட்டியலில் எதிர்பாராதவிதமாக ஆப்கானிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தை பிடித்தது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது மற்றும் நான்காம் இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு ஆப்கானிஸ்தான் அணியால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் 2023 உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலில் ஏழு போட்டிகளில் நான்கு வெற்றிகளுக்குப் பிறகு 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தற்போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளின் அரையிறுதி (Semi Final Race) வாய்ப்புக்கு ஆப்கானிஸ்தான் அணி சிக்கலை உருவாக்கி வருகிறது.

Semi Final Race - ஆப்கானிஸ்தான் :

ஆஸ்திரேலியா 6 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து 7 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 7 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தான் 7 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்தும், ஆப்கானிஸ்தானும் ஒரே புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், நிகர ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்திலும் உள்ளன. நிகர ரன் ரேட் வித்தியாசம் மாற வாய்ப்புள்ளதால், அரையிறுதி வாய்ப்பு (Semi Final Race) அடிப்படையில் இரு அணிகளும் சம நிலையில் இருப்பதாக கருதலாம்.

நியூசிலாந்து இன்னும் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வியடைந்தாலும், நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு ஆப்கானிஸ்தானின் வெற்றி அல்லது தோல்வியைப் பொறுத்தே அமையும். அதேபோல், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிராக இன்னும் விளையாட உள்ள ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோற்றால் தானாகவே சிக்கலில் சிக்கிக்கொள்ளும். அப்படி நடந்தால், ஆப்கானிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு (Semi Final Race) கிடைக்கும். அதுவும் இங்கிலாந்து, வங்கதேசத்தை வீழ்த்தியிருக்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply