Semma Unavagam Got No 1 Award In New York : தமிழரின் 'செம்ம உணவகம்' நியூயார்க்கின் நம்பர் 1 உணவகம் விருதை வென்றது

நியூயார்க் நகரத்தின் 2025-ம் ஆண்டுக்கான நம்பர் 1 உணவகம் விருதை தமிழக ‘செம்ம உணவகம்’ வென்றுள்ளது. New York Times வெளியிட்ட “நியூயார்க்கின் 100 சிறந்த உணவகங்கள்” பட்டியலில் செம்ம உணவகம் முதலிடத்தைப் (Semma Unavagam Got No 1 Award In New York) பிடித்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனை ஆகும். இது குறிப்பாக தென்னிந்திய சமையலுக்கும் மற்றும் பிற இந்திய உணவு வகைகளுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். இதற்கு முன்னதாக 2024-ம் ஆண்டில் New York Times வெளியிட்ட “நியூயார்க்கின் 100 சிறந்த உணவகங்கள்” பட்டியலில் ‘செம்ம உணவகம்’ 7வது இடத்தைப் பிடித்திருந்தது.

அமெரிக்காவை அசத்தும் தமிழரின் 'செம்ம உணவகம்'

உலகின் மிகவும் பிரபலமான சமையல்காரர்களில் விஜய் குமார் ஒருவர் ஆவார். இவர் மிக சமீபத்தில், மதிப்புமிக்க ஜேம்ஸ் பியர்ட் விருதை வென்றவர். இவரது செம்ம உணவகம் ஆனது நியூயார்க்கின் கிரீன்விச் கிராமத்தில் (Semma Unavagam Got No 1 Award In New York) மன்ஹாட்டனின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் உணவு வகைகளை தூய்மையுடன் வழங்குவதில் இந்த உணவகம் ஆனது நல்ல பெயர் பெற்றுள்ளது.

நியூயார்க்கில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மிச்செலின் நட்சத்திரம் (Michelin Star) என்ற கவுரவத்தை இந்த செம்ம உணவகம், ஆனது பெற்றுள்ளது. மிச்செலின் நட்சத்திரம் என்ற கவுரவத்தைப் பெற்ற ஒரே இந்திய உணவகம் இந்த செம்ம உணவகம் ஆகும்.

இந்த செம்ம உணவகத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த Chef Vijay Kumar சிறப்பாக நடத்தி வருகிறார். தமிழ்நாட்டின் தனிப்பட்ட மற்றும் பாரம்பரிய சமையல் பாணியை செம்ம உணவகம் ஆனது பின்பற்றுகிறது. இந்த உணவகத்தில் தேங்காய், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போன்ற தென்னிந்தியப் பொருட்களைப் பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவுகளுக்கு உண்மையான தென்னிந்திய சுவைகளை வழங்குகின்றன. இந்த செம்ம உணவகத்தில் சரியாக புளிக்கவைக்கப்பட்டு, நெய்யில் மொறுமொறுப்பாகச் சுடப்படடும் தோசை மிகவும் பிரபலமானது. இது “நியூயார்க்கின் சிறந்த தோசை” என்ற பாராட்டைப் பெற்றுள்ளது.

Semma Unavagam Got No 1 Award In New York - Platform Tamil

New York Times-ன் புதிய தரவரிசை (Semma Unavagam Got No 1 Award In New York)

வழக்கமாக New York Times தேர்ந்து எடுக்கப்படும் 100 உணவகங்களுக்கும் வரிசை எண் வழங்கப்பட்டு வந்தது. இந்த 2025-ம் ஆண்டுக்கான புதிய தரவரிசை முறைப்படி முதல் 10 உணவகங்களுக்கு மட்டுமே எண் வரிசை வழங்கப்பட்டது. இதில் ‘செம்ம’ முதல் இடத்தைப் பிடித்து அசத்தி உள்ளது. நியூயார்க்கின் பலதரப்பட்ட உயர்தர உணவகங்களுக்கு மத்தியில், தமிழக “செம்ம உணவகம்” தனது சமையல் தனித்துவத்தால் தனித்து சிறந்து விளங்குகிறது.

Latest Slideshows

Leave a Reply