Sensex Down 3,000 Points : இந்திய பங்குசந்தைகளில் வீழ்ச்சி

இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை (Sensex Down) சந்தித்து வருகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் முதலீட்டாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த 9 தொடர்களில் பங்குச்சந்தை 3,000 புள்ளிகளை கடந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் துறைகளிலும் இழப்புகள் அதிகம். சில்லறை வர்த்தக முதலீட்டாளர்களும் கடும் சரிவைச் சந்தித்துள்ளனர். இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருவதால் ரூ.1 லட்சம் கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களை சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வைத்துள்ளது.

நிஃபட் வரலாறு காணாத அளவு சரிவு : Sensex Down

Sensex Down 3,000 Points - Platform Tamil

2019 ஆம் ஆண்டு முதல் நிஃப்டி தொடர்ந்து சரிவைச் (Sensex Down) சந்தித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் மே 13 ஆம் தேதி வரை 5 சதவீதம் சரிந்து நிஃப்டி தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 6 சதவீதம் மீண்டு வந்தாலும், நிஃப்டி தற்போது 22 ஆயிரத்தில் வர்த்தகமாகி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நிஃப்டி 26 ஆயிரம் புள்ளிகளை நெருங்க வாய்ப்பிருந்தது.

அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகள் விற்பனை :

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். அக்டோபர் 2024 முதல் விற்பனை நடந்து வருகிறது. அமெரிக்கப் பத்திர ஈட்டுத் தொகை, அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பு மற்றும் ஃபெரட்ல் வட்டி விகிதம் குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடாததது ஆகிய காரணங்களால் விற்பனை செய்வது தொடர்கிறது. பிப்ரவரியில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்றனர், இதன் விளைவாக ரூ.2.75 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியே சென்றுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி :

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி (Sensex Down) உள்நாட்டு முதலீட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. வாரத்தின் முதல் நாளில் (பிப்17) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது. தொடர்ந்து 8 நாட்கள் சரிவுடன் வாரத்தை முடித்த பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. இந்தியப் பங்குச் சந்தை (17.02.2025) மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57.65 அல்லது 0.076% புள்ளிகள் சரிந்து 75,996.86 ஆகவும், தேசியப் பங்குச் சந்தை குறியீடான எண் நிஃப்டி 30.25 அல்லது 0.13% புள்ளிகள் சரிந்து 22.959.50 ஆகவும் வர்த்தகமாகியது. நிஃப்டி 23 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே வர்த்தகமானது. பங்குச் சந்தை இன்னும் ஒரு வாரத்திற்கு மந்தமான மனநிலையில் இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஏற்றத்தில் வர்த்தகம் செய்வதற்கான சில வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 

Latest Slideshows

Leave a Reply