Senthilkumar's Radiation Protective Suit : கதிரியக்க பாதுகாப்பு கவச உடை காப்புரிமை பெற்றார்

Senthilkumar's Radiation Protective Suit - மத்திய அரசு மதுரை டாக்டர் செந்தில்குமாருக்கு கதிரியக்க பாதுகாப்பு கவச உடை காப்புரிமை வழங்கியுள்ளது :

இந்தியாவில் முதல் முறையாக டாக்டர். செந்தில்குமாரால் இந்த ஏப்ரன் தயாரிக்கபட்டுள்ளது. டாக்டர்.செந்தில்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். டாக்டர்.செந்தில்குமார் எடை குறைவான ‘ஏப்ரன்’ கவச உடையை வழக்கமாக கதிரியக்க துறைகளில் பணிபுரியும் டாக்டகள் மற்றும் நர்ஸ்கள் பயன்படுத்தும் காரீய பாதுகாப்பு கவச உடைக்கு மாற்றாக (Senthilkumar’s Radiation Protective Suit) உருவாக்கியுள்ளார். டாக்டர்.செந்தில்குமார் நுரையீரல் புற்றுநோய்க்கு துல்லிய கதிரியக்க சிகிச்சை அளிக்கும் கருவி மற்றும் புற்றுநோய்க்கு மட்டும் துல்லிய கதிரியக்க சிகிச்சை அளிக்கும் கருவி என 50க்கும் மேற்பட்ட கருவிகளை கதிரியக்க சிகிச்சை துறையில் கண்டுபிடித்துள்ளார். டாக்டர்.செந்தில்குமார் கதிரியக்க சிகிச்சை துறையில் 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து  40 விருதுகளை பெற்றுள்ளார். தற்போது டாக்டர்.செந்தில்குமார் ஏப்ரன் உருவாக்கியுள்ளார். மத்திய அரசு செந்தில்குமாருக்கு காரீய பாதுகாப்பு கவச உடைக்கு காப்புரிமை (Senthilkumar’s Radiation Protective Suit) வழங்கியுள்ளது.

மத்தியஅரசின் காப்புரிமை பெற்றது குறித்து டாக்டர்.செந்தில்குமார் கூறியதாவது :

Senthilkumar’s Radiation Protective Suit : இரண்டடுக்கில் இலகுவான எக்ஸ்ரே கவசத்தை பிஸ்மத், ஆன்டிமனி, பேரியம் சல்பேட் கலவையை பாலிமர் உடன் சேர்த்து கண்டுபிடித்துள்ளார். இது, 25% கூடுதல் பாதுகாப்பை தருவதோடு வழக்கமான காரீய ஏப்ரனை விட 20% எடை குறைவாக உள்ளது. இந்த பாதுகாப்பு கவச உடை ஆனது குறைந்த விலையில் கிடைக்கும். பிஸ்மத் தனிமம் ஆனது காரீயத்தை காட்டிலும் அதிக அணுஎண் கொண்டது. பேரியம் சல்பேட், ஆன்டிமனி குறைந்த அணுஎண் பொருட்கள் அதிக மீள்தன்மை கொண்ட பாலிமருடன் கலந்துள்ளதால் ஒரு ஏப்ரனை மூன்றாண்டுகளுக்கு மேல் பயன்படுத்தலாம். கதிரியக்க துறைகளில் தினமும் பணிபுரியும் டாக்டர், நர்ஸ் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இந்த ஏப்ரன்  நல்லது. இந்த கவச உடை அணிவதன்  மூலம்  டாக்டர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு ஊழியர்கள் தங்களை கதிரியக்க பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம்.

வளையும் தன்மை உள்ளதால் இந்த ஏப்ரனை எளிதாக மடித்து வைக்கலாம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது மற்றும் மறுசுழற்சிக்கு உகந்தது. மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், “டாக்டர்.செந்தில்குமார் முதலில்  எங்களது மருத்துவமனை டாக்டர், நர்ஸ்களுக்காக 50 ஏப்ரன்கள் தயாரிப்பார். அதன் பின் டாக்டர். செந்தில்குமார் ஏதாவது ஒரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளார்” என்று கூறினார்  

Latest Slideshows

Leave a Reply