Severe Drought In South Africa : தென் ஆப்பிரிக்காவில் நிலவிவரும் கடும் வறட்சி

Severe Drought In South Africa :

உலக அளவில் வறட்சியால் பாதிக்கப்படும் கண்டங்களில் முதன்மையான தென் ஆப்பிரிக்காவில் வரலாறு காணாத வறட்சி ஆனது நிலவி வருகிறது. கடுமையான  வறட்சியால் பாதிக்கப்பட்டு விவசாயம்,  விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, கடுமையான பட்டினிக்கு மக்கள் ஆளாகி உள்ளார்கள். ஜிம்பாப்வேயில் மட்டும் 5,80,000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக ஐநா நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிவித்து உள்ளது.

தற்போது தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நாம்பியாவில், கடுமையான வறட்சி காரணமாக, மக்கள் பசியிலும், பட்டினியிலும் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறார்கள். தென் ஆப்பிரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் பாதியளவு ஆனது, அதாவது சுமார் 14 லட்சம் மக்கள் நாம்பியாவில்தான் வாழ்கிறார்கள். இந்த வறட்சி ஆனது அந்நாட்டு மக்களை நிலைகுலைய (Severe Drought In South Africa) செய்திருக்கிறது. வருமானம் இல்லாத நிலையில், தங்கள் குழந்தைகளை 25 டாலர்கள் செலுத்தி பள்ளியில் சேர்க்க முடியாததால் லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி ஆனது பாதிக்கப்பட்டு உள்ளது.

இப்போதைய துயரம் என்னவென்றால் ஒருவேளை மட்டுமே குடும்பத்தினர் உணவு சாப்பிடும் நிலை ஆனது நிலவி வருகிறது. நாம்பியாவில் நிலவி வரும் கடுமையான வறட்சி (Severe Drought In South Africa) காரணமாக, மக்களுக்கு உணவளிப்பதற்காக, வனவிலங்குகளை கொல்ல, அந்த நாட்டு அரசு முடிவெடுத்திருக்கிறதாம். நாம்பியா மக்களுக்கு சாப்பாடு தருவதற்காக, காட்டிலுள்ள மொத்தம் 723 வனவிலங்குகளை கொன்று, அவைகளின் இறைச்சியை உணவாக பயன்படுத்த அந்த நாட்டு அரசு ஆனது முடிவெடுத்துள்ளது. அந்தவகையில்,

  • 300 வரிக்குதிரைகள்
  • 100 காட்டெருமைகள்
  • 50 இம்பாலா மான்கள்
  • 100 எலான்ட் வகை மான்கள்
  • 30 நீர்யானைகள்
  • 83 யானைகள்

என மொத்தம் 723 விலங்குகளை அந்த நாட்டு அரசு கொல்ல முடிவெடுத்துள்ளது. இப்போது அழிந்து வரும் பட்டியலில் ஆப்பிரிக்க சவானா யானைகள் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்த யானைகளையும் கொல்லப்படுவது மிகப்பெரிய கவலையை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி மற்றும் பட்டினி ஆனது நாம்பியாவை வாட்டி வதைத்து கொண்டிருப்பதும், இதற்காக 723 விலங்குகள் கொல்லப்படுவதும் உலக மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply