Shaakuntalam Movie Review: மீண்டும் ஒரு காதல் காவியம்

புராண கதைகளை மையமாக கொண்ட திரைப்படங்கள் இப்பொழுது இந்திய திரையுலகில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் காளிதாசர் எழுதிய அபிஞான சாகுந்தலம் என்னும் புராண கதையை மையமாக கொண்டு இயக்குனர் குணசேகர் சாகுந்தலம் என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சகுந்தலையாக சமந்தா நடித்திருக்கிறார், துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் அல்லுஅர்ஜுனின் மகள் அல்லு அர்ஹாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் 14.04.2023 நேற்றய தினம் வெளியாகியது. தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தை ராஜு தயாரித்துள்ளார்.

கதை சுருக்கம்:

விஸ்வாமித்திரருக்கும், மேனகைக்கும் பிறந்த குழந்தைதான் சகுந்தலை. விஸ்வாமித்திரர் மேனகையை பிரிந்த தருணத்தில் மேனகை தன் குழந்தையை கன்வ முனிவரின் துறவு இல்லத்திற்கு அருகில் விட்டு சொர்க்கம் சென்றால் அப்பொழுது சகுந்தல பறவைகளால் சூழப்பட்டிருந்த குழந்தையை கன்வ முனிவர் கண்டெடுத்தார் அதனால் அக்குழந்தைக்கு சகுந்தலை என்ற பெயர் வைத்து தன் ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்று வளர்க்கிறார்.

தனது இளமை பருவம் வரை காட்டில் வளர்கிறாள். அப்போது ஒரு நாள் துசுயந்தன் மன்னன் காட்டில் பயணிக்கும்போது சகுந்தலாவை சந்திக்கிறார். அவள் மீது காதல் வயப்பட்டு ஆசிரமத்தில் சிறிது காலம் தங்குகிறார். இருவரும் கந்தர்வ திருமணம் செய்து கொள்கின்றனர். மீண்டும் தனது நாட்டிற்கு திரும்பும் துசுயந்தன் மீண்டும் சகுந்தலாவை வந்து சந்திப்பேன், தன்னுடன் அழைத்துச் செல்வேன் என்று கூறி தனது நாட்டிற்கு செல்கிறார்.

அதன் பின் சகுந்தலை துசுயந்தனின் நினைவால் கவனம் இழந்து துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகிராள் காலம் கடந்து செல்ல செல்ல  தனது கணவனான துசுயந்தனை தேடி சகுந்தலைஅவருடைய நாட்டிற்கு சென்று தனது கணவனை சந்திக்கிறால் ஆனால் சகுதலையின் சாபத்தினால் துசுயந்தன் சகுந்தலையை மறக்கிறார்.

பின் சில நிகழ்வுகளுக்கு பிறகு இருவரும் இணைகின்றனர். இவர்களுக்கு பிறகும் குழந்தைதான் பரதன். இந்த கதை மகாபாரதத்தின் ஆதி பர்வ கதை இந்த கதையை மையமாக கொண்டுதான் இப்படம் இயற்றப்பட்டுள்ளது. 

சாகுந்தலம் பட விமர்சனம் (Shaakuntalam Movie Review):

Shaakuntalam Movie Review - Platform Tamil

இப்படத்தின் கதாநாயகியாக சமந்தா சகுந்தலை கதா பாத்திரத்தில்  உணர்வு பூர்வமாக நடித்திருக்கிறார். வலிமை மிக்க அரசன், போர்வீரன், என்றும் காதல் காட்சிகளில் தனது தனித்துவமான நடிப்பை மோகன் வெளிப்படுத்தியுள்ளார். அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா தனது கியூட் நடிப்பால் கவர்கிறார். விஸ்வாமித்திரராக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். மதுபாலா மேனகாவாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மேலும் கோத்தமி, கபீர் பேடி, சச்சின் கெடேகர், அதிதி பாலன் ஆகியோர் தங்களின் கதா பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

சாகுந்தலம் படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் பிரமாண்டமாகவே இருக்கிறது. படத்தில் வரும் விலங்குகளின் காட்சிகள், காடுகளின் காட்சிகள் அழகாக காண்பிக்கப்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து கிராமத்தை காப்பாற்றும் காட்சியை ஒளிப்பதிவாளர் அழகாக காண்பித்து இருக்கிறார். வனங்கள், அதில் பூக்களும், வண்ணம் கலந்த பட்டம்பூச்சுக்களும், பறவைகள், மயில்கள் என்று இப்படி ஒவ்வொரு காட்சிகளையும் அழகாக காண்பித்து. அந்த உலகத்திற்கே பயணம் மேற்கொள்வது போல விஷுவலை அமைத்து கொடுத்திருக்கிறார்.

பிரம்மாண்டத்திற்கு கொஞ்சம் கூட குறை என்றே சொல்ல முடியாத அளவில் காட்சியமைப்புகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தின் காட்சி அமைப்பிற்காகவே திரையரங்கில் சென்று பார்க்கலாம். விஷுவல் எபெக்ட்ஸ் தரமாக இருக்கிறது.

படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். சகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா அழகாக இருக்கிறார். 3டி எபெக்ட் அருமையாகவும், தனித்துவமாகவும் இருக்கிறது. இசை அருமையாக இருக்கிறது. என்றெல்லாம் கூறியுள்ளனர். மேலும் சமந்தாவின் கெரியரில் இந்த படம் சிறந்த படம்.

கொஞ்சமும் போர் அடிக்காமல் இந்த படம் இருக்கிறது என்றும் நடிகர் தேவ் மோகன் அழகாக இருக்கிறார் என்றும் பதிவிட்டுள்ளனர். மேலும் சில எதிர்மறையான விமர்சனங்களையும் பதிவிட்டுள்ளனர் மெதுவாக நகரும் கதையாக திரைப்படம் இருக்கிறது. சலிப்பூட்டும் கதையாக புராண நாடகம் இது என்றும், படத்தின் VFX மோசமாக இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளனர்.  இவ்வாராக படம் வெளியாகி ஒரே நாளில் அனைத்தும் கலந்த கலவையாக விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் வந்து கொண்டேயிருக்கிறது.

Shaakuntalam Movie Review - அழகு ராணியாக சமந்தா ரூத் பிரபு

Shaakuntalam Movie Review - Platform Tamil

சமந்தா ரூத் பிரபுவின் வெளிப்பாடுகள் ஒவ்வொரு காட்சியிலும் பூக்கள் ஏந்திய பெண்ணாக தெய்வீகமாகவும், கோபமான பெண்ணாக இருந்தாலும் ஒரு அப்பாவி கண்களைக் கொண்ட அழகியாக இருந்தாலும், ஒரு மகிழ்ச்சியற்ற மற்றும் ஆதரவற்ற மனைவி இலக்கு வைக்கப்பட்டாலும் ராணியாக அனைத்து அழகுகளிலும் காணப்படுகிறார். சமந்தா ரூத் பிரபுவின் வெளிப்பாடுகள் ஒவ்வொரு காட்சியிலும் அழகாக இருக்கிறது.

தெய்வீக நோக்கம் ஆனது சகுந்தலாவின் வேதனையில் அதிகம் கூறப்படுகிறது. அவளை ஒரு அன்பான பெண்ணாகப் பார்ப்பது  மற்றும்  காஷ்யப் முனிவரின் (கபீர் பேடி) துறவறத்தில் தன் மகனை அவள் தனியாக வளர்ப்பதைப் பார்ப்பது சுவாரஸ்யம்.

Shaakuntalam Movie Review - சக்திவாய்ந்த தேவ் மோகன் நடிப்பு

தேவ் மோகன் தனது சக்திவாய்ந்த நடிப்பை ஒரு நீதியுள்ள ராஜாவாகவும், அச்சமற்ற போர்வீரனாகவும், நேசிப்பவராகவும் அழகாக வெளிப்படுத்துகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும்  திறமையாக செய்துள்ளார்.

Shaakuntalam Movie Review - மேனகாவாக மது கேமியோ

குறுகிய திரை நேரத்தில் வந்தாலும் மேனகாவாக ஒரு நேர்த்தியாகவும், தாக்கத்தை ஏற்படுத்தும் பாத்திரமாகவும் மது கேமியோவில் நடித்துள்ளார். அசோக் குமாரின் கலை இயக்கம் மற்றும் புராண உலகத்தை உருவாக்குவதில் ஜோசப் வி சேகரின் ஒளிப்பதிவு காட்சிகள், VFX  என  நாம் வியக்கும்  வண்ணத்தில் உள்ளது. கதையின் அடிப்படையில் இயக்குனர் குணசேகர் மிகவும் தைரியமாக முன்வரவில்லை.

Shaakuntalam Movie Review - மணி ஷர்மாவின் மெலடிகள்

Shaakuntalam Movie Review - Platform Tamil

இனிமையான ‘மல்லிகா மல்லிகா’ முதல் காதல் ‘மதுர் கல் து’ வரை படத்தின் செழுமையான மெலடிகள் மணி ஷர்மாவின் இசையில்  இனிமையாக உள்ளன. தயாரிப்பு மற்றும் காட்சி முறையானது பெரிய அளவில் பிரமிப்பாக செய்யப்பட்டுள்ளது.

இப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் வெளியாகிறது.  திரையரங்குகளில் சாகுந்தலம்  சினிமா அனுபவம் சிறப்பாக இருக்கும். பண்டைய கவிஞர் காளிதாசனின் மிகவும் மதிக்கப்படும் கவிதைகளில் ஒன்று பெரிய அளவில் மீண்டும் சொல்லப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply