Shaktimaan Movie: 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சக்திமான்

300 கோடி பொருட்செலவில் சக்திமான் திரைப்படம் உருவாக இருப்பதாக நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். தற்போது பல சூப்பர் ஹீரோக்கள் சீரியல்களாகவும் மற்றும் திரைப்படங்களாகவும் எடுத்து வருகின்றனர். இன்றைய இளைஞர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்றார் போல பல சூப்பர் ஹீரோக்கள் உள்ளனர். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை முதல் சூப்பர் ஹீரோ சக்திமான்தான்.

90களில் பிறந்தவர்களுக்கு விருப்பமான சூப்பர் ஹீரோ என்றால் அது சக்திமான் தான். இது டிடி Chanel – இல் வெளியிட்ட முதல் தொடராகும். இது மிகப்பெரிய வெற்றி தொடர்களில் ஒன்றாகும். இன்றைக்கும் 90களில் பிறந்தவர்களுக்கு சூப்பர் ஹீரோ. தற்போது சக்திமான் தொடரை ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி பட்ஜெட்டில் படமாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தொடரில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது சக்திமான் படத்தை தொடர் படமாக எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்தில் அதிகபட்சமாக 300 கோடி பட்ஜெட்டில் சோனி பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. கொரோனா பாதிப்பால் படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக ஒன்று சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் நான் சக்திமான் வேடத்தில் நடிக்கவில்லை. வடகுழுவினர் எந்த ஒப்பீடும் செய்ய விரும்பாததால் நான் அதில் சிறப்புத் தோற்றத்தில் கூட நடிக்கவில்லை. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் படம் வித்யாசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சக்திமான் தொடரானது 1997 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் Channel – இல் ஒளிபரப்பானது. இந்த தொடர் சிறுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இந்தத் தொடர் 2005 வரை தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொடரில் முகேஷ் கண்ணா ஒரு சக்திமானாக நடித்தார். அந்த படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து தற்போது வரை பல்வேறு படங்கள் உருவாகி வருகிறது. ஹிப்ஹாப் தமிழன் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான வீரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சக்திமான் தொடரை இன்ஸ்பிரேஷனாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது என்று நடிகர் ஆதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply