இந்தியா இன்றும் Shakuntala Railway Line-க்காக பிரிட்டிஷாருக்கு பணம் செலுத்துகிறது

சகுந்தலா ரயில் பாதைக்காக பிரிட்டிஷாருக்கு இந்திய அரசு இன்றும் பணம் செலுத்துகிறது :

இந்தியாவில் அன்றைய பிரிட்டிஷ் அரசு 1850களில் பம்பாய் முதல் தானே வரையான முதல் ரயில் சேவை பாதையை போட்டது. அதேபோல் ஆங்கிலேயர்கள் சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய அரசு ஆனது இந்தியாவில் ஆங்கிலேயர்கள் போட்டிருந்த அந்த ரயில் சேவைகளின் முழு ஆளுமையையும் ஏற்றது. அதன்பிறகு, இந்தியாவில் நவீன ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து வருகிறது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ரயில் நெட்வொர்காக இருந்து வருகிறது. வந்தே பாரத், அதிவேக ரயில், மட்டுமல்லாது புல்லட் ரயில் சேவைகளுக்கான பணியும் நடைபெற்று வருகிறது. காந்த சக்தியை பயன்படுத்தி போகும் அதிவேக ரயில்களை கொண்டு வரவும் இந்திய ரயில்வே துறை ஆனது முயற்சி செய்து வருகிறது.

இந்திய ரயில்வே துறையில் இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் ஒரே ஒரு ரயில் பாதை மட்டுமே பிரிட்டிஷ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்திய ரயில்வே துறை அந்த ஒரு ரயில் பாதைக்காக இன்றும் பிரிட்டிஷாருக்கு பணம் செலுத்தி வருகிறது. அதாவது இந்திய விடுதலைக்குப் பின்னர் 1952ல் ஆங்கிலேயர் கால ரயில்வே ஆனது இந்திய தேசியமயமாக்கப்பட்டபோது இந்த Shakuntala Railway Line-பாதையை மட்டும் அந்த நிறுவனத்திடம் இருந்து இந்திய ரயில்வே துறை வாங்கவில்லை. சகுந்தலா இரயில்வே நிறுவனம் ஆனது தொடர்ந்து தனியார் துறையிடமே இருந்தது.

Shakuntala Railway Line- சகுந்தலா ரயில்வே பாதை :

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது சகுந்தலா இரயில்வே எனப்படும் 190 கிலோமீட்டர் நீளமுள்ள குறுகிய ரயில் பாதை ஆனது யவத்மால் மற்றும் மூர்த்திஜாபூர் இடையே கட்டப்பட்டது. சகுந்தலா ரயில்வே பாதையை 1910ல், கில்லிக்-நிக்சன் (Killick-Nixon) என்ற தனியார் பிரிட்டிஷ் நிறுவனம்தான் நிறுவியது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்த சகுந்தலா ரயில்வே பாதையில் ரயில்களை மத்திய இந்தியா முழுவதும் இயங்கிய கிரேட் இந்தியன் பெனிசுலர் ரயில்வே (Great Indian Peninsular Railway) நிறுவனம் இயக்கியது. முதலில் சரக்கு ரயில் செல்லும் பாதையாக சகுந்தலா ரயில்வே பாதை (Shakuntala Railway Line) இருந்தது.

அதாவது பருத்தியை யவத்மாலில் இருந்து மும்பைக்கு (பம்பாய்) கொண்டு செல்லும் பாதையாக இருந்தது. பின்னர் இது மக்களை ஏற்றிச் செல்லும் இரயில்வே பாதையாக மாற்றப்பட்டது. மத்திய இந்தியாவில் யவத்மால் மற்றும் அச்சல்பூர் இடையே சகுந்தலா எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இன்றைய நிலையில் சகுந்தலா ரயில்வே பாதையில் (Shakuntala Railway Line) ஒரு நாளைக்கு ஒரு சுற்றுலா ரயில் மட்டுமே இயங்கி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில் தண்டவாளங்களை நிறுவிய நிறுவனம் தான் இன்னும் இந்த ரயில் பாதையை பராமரித்து வருகிறது. பிரிட்டிஷ் நிறுவனத்தின் கீழ் தான் இன்றும் இந்த ஒரு ரயில் பாதை இருக்கிறது. இன்றும் இந்திய அரசு அந்த பாதைக்காக பிரிட்டிஷாருக்கு ரூ.1.2 கோடி கட்டணத்தை செலுத்தி வருகிறது. இந்திய ரயில்வே துறை சகுந்தலா ரயில் பாதைக்காக பிரித்தானியர்களுக்கு பணம் செலுத்துவதாகக் கூறப்படும் அறிக்கையை மறுத்துள்ளது, மேலும் இந்த நெட்வொர்க்கில் தற்போது எந்த ரயில் சேவையும் இயங்கவில்லை என்று கூறியது.

Latest Slideshows

Leave a Reply