Shami Ruled Out For IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து முகமது ஷமி காயம் காரணமாக விலகல்

மும்பை :

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என (Shami Ruled Out For IPL 2024) அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முகமது ஷமி. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். உலக கோப்பை தொடருக்கு பிறகு முகமது ஷமி எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

Shami Ruled Out For IPL 2024 :

கடந்த உலகக்கோப்பை தொடருக்கு பின்பு முகமது ஷமி காயம் காரணமாக லண்டனில் மருத்துவ சிகிச்சை செய்து கொண்டிருந்தார். ஆனால் அது அவரது வலியை குறைக்கவில்லை. இதனால் ஷமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதனால் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் ஷமி பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் ஷமி. ஐபிஎல் 2022ல் குஜராத் அணிக்காக ஷமி சிறப்பாக ஆடினார். 2022ல் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி, கடந்த ஐபிஎல் சீசனில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Shami Ruled Out For IPL 2024 : ஹர்திக் பாண்டியா ஏற்கனவே இல்லாத நிலையில், ஷமி இல்லாததும் குஜராத் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாற்று வீரரை தேடும் பணியில் குஜராத் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற அறுவை சிகிச்சை அவரது கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்கும். ஒருவேளை அதிலிருந்து மீண்டு வந்தால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாட முடியும். இதன் காரணமாக ஷமிக்கு பதிலாக யாரை களமிறக்கலாம் என குஜராத் டைட்டன்ஸ் அணி யோசித்து வருகிறது. அதேபோல், இந்தியாவின் டி20 உலகக் கோப்பையில் ஷமிக்கு மாற்று வீரரை தேர்வு செய்ய பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply