Shane Watson : உலககோப்பையில் தொடர் நாயகன் விருதை வெல்லுவது ரோஹித் சர்மா தான்

சென்னை :

உலகக் கோப்பை தொடர் நாயகன் விருதை யார்  வெல்வார் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் Shane Watson விராட் கோலியும், பும்ராவும் சொல்லாமல் மற்றொரு வீரரின் பெயரைக் குறிப்பிட்டார். 2023 உலகக் கோப்பை தொடரில், இந்தியா விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறப்பாக விளையாடி வருகிறது. எப்படியும் இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். வழக்கமாக, இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணியின் வீரர் உலகக் கோப்பை தொடர் நாயகன் விருதை வெல்வார். அந்த வகையில், உலகக் கோப்பை தொடர் நாயகன் விருதை வெல்வது யார் என்று ஷேன் வாட்சனிடம் கேட்டபோது, ​​ரோஹித் சர்மா என்று குறிப்பிட்டார்.

Shane Watson :

இது குறித்து Shane Watson கூறுகையில், என்னை பொறுத்தவரை உலக கோப்பை தொடரின் நாயகனாக ரோஹித் சர்மா இருப்பார் என நினைக்கிறேன். அவர் தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளார். அவர் பேட்டிங் செய்வதை பார்க்க ஆச்சரியமாக உள்ளது. உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக முதல் பந்தில் இருந்தே ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். மேலும் இந்த தொடரின் இறுதி வரை அதே மாதிரியான ஆட்டத்தை அவர் தொடருவார் என நம்புகிறேன். அதனால் அவர் எனக்கு நம்பர் 1 என்றார். இந்தியாவைத் தவிர தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன. அந்த அணி வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் ஜம்பா, தென்னாப்பிரிக்காவின் ஜான்சன் ஆகியோர் 13 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் டி காக் அதிகபட்சமாக 431 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்து விராட் கோலி (354 ரன்கள்), வார்னர் (332 ரன்கள்) உள்ளனர். ஆனால் இவர்களுக்குப் பதிலாக உலகக் கோப்பை தொடர் நாயகன் விருதை ரோஹித் சர்மா வெல்வார் என Shane Watson கணித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply