Shanmuga Pandiyan's New Movie : விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் புதிய படத்தின் பூஜை

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவர் விஜயகாந்த். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது மறைவு தமிழகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவருக்கு விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது புதிய படம் (Shanmuga Pandiyan’s New Movie) குறித்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் :

கேப்டன், புரட்சிக் கலைஞர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். மதுரையில் பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் சினிமா மோகத்தால் சென்னைக்கு வந்து இங்கு பல இன்னல்களை சந்தித்தார். எப்படியோ பட வாய்ப்பு கிடைத்து ஜொலிக்க ஆரம்பித்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் உச்சத்தில் இருந்தபோது தனக்கென ஒரு கோட்டையை உருவாக்கி அதற்கு ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டார். கிராமத்துக்காரன் போல் நடித்ததால் ரசிகர்கள் அவரை தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டனர். வில்லனாக அறிமுகமானாலும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து சாதித்தார்.

ஒரே வருடத்தில் 5 படங்களுக்கு மேல் நடித்து மிகவும் பிஸியாக இருந்தார். ரஜினிகாந்த், கமலின் 100வது படம் சரியாகப் போகவில்லை. ஆனால் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அதேபோல் திரைப்படக் கல்லூரியில் இருந்து இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு வெளியே வந்த பலருக்கும் முதல் பட வாய்ப்பை வழங்கியவர் விஜயகாந்த். அதுமட்டுமின்றி பல இயக்குநர்கள் விஜயகாந்தை வைத்து முதல் படத்தை இயக்கினார்கள். புதுமுகங்கள் மீது அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. மேலும் சினிமாவில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வரக்கூடாது என்பதற்காக அவர் தனது அலுவலகத்தில் தொடர்ந்து உணவு வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசியலில் இறங்கி தமிழக எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனால் அரசியல் அரங்கில் அவர் சந்தித்த சில துரோகங்கள் அவரை வளைத்தன. இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

Shanmuga Pandiyan's New Movie :

இந்நிலையில், விஜயகாந்தின் மகன்களில் ஒருவரான சண்முக பாண்டியனும் சினிமாவில் நடித்து வருகிறார். அவர் அறிமுகமான சகாப்தம் படம் சரியாகப் போகவில்லை. இதையடுத்து தற்போது படைத்தலைவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் புதிய படம் (Shanmuga Pandiyan’s New Movie) ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

அந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் இப்படத்தை இயக்குகிறார். நேற்று விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர். மேலும் படத்திற்கான பூஜையை தொடங்கினர். பொன்ராம் சிவகார்த்திகேயனுக்கு எப்படி இரண்டு மெகா ஹிட் கொடுத்தாரோ அதேபோல் சண்முக பாண்டியனுக்கு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Slideshows

Leave a Reply