ஜப்பானின் Sharp Aquas Sense 8 எனும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது

சிம்ப்ளிஸிட்டி ஆனா செம பவர்புல் என்று கூறும் விதத்தில் ஜப்பான் இப்போது ஒரு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை சந்தையில் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் ஷார்ப் அக்வாஸ் சென்ஸ் 8 (Sharp Aquas Sense 8) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானில் நேற்று புதன்கிழமை இந்த ஷார்ப் அக்வாஸ் சென்ஸ் 8 (Sharp Aquas Sense 8) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதியவகை ஸ்மார்ட்போன் ஒரு ஒற்றை ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு OS 13 உடன் வெளிவந்துள்ளது. இது டூயல் பின்புற கேமரா மாடலை அடிப்படையாக கொண்டுள்ளது.

ஷார்ப் அக்வாஸ் சென்ஸ் 8 (Sharp Aquas Sense 8) Color :

  • இந்த புதிய ஷார்ப் அக்வாஸ் சென்ஸ் 8 ஸ்மார்ட்போன் சாதனம் கோபால்ட் பிளாக் (Cobalt Black), லைட் காப்பர் (Light Copper) மற்றும் வெளிர் பச்சை (Pale Green) எனும் மூன்று வண்ண விருப்பங்களில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Sharp Aquas Sense 8 ஒரு தனி 6GB + 128GB வேரியண்ட் மாடலில் கிடைக்கிறது. இது ஜப்பானில் JPY ரூ.62,150 விலையில் கிடைக்கிறது.

ஷார்ப் அக்வாஸ் சென்ஸ் 8 (Sharp Aquas Sense 8) Storages :

  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Qualcomm Snapdragon 6 Gen 1) சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இது 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மைக்ரோ SD கார்டு மூலம் 1TB வரை விரிவாக்கக்கூடியது. மேலும் ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது.

ஷார்ப் அக்வாஸ் சென்ஸ் 8 (Sharp Aquas Sense 8) Camera :

  • ஜப்பான் நிறுவனம் மூன்று முக்கிய OS புதுப்பிப்புகள் மற்றும் ஐந்து வருட பாதுகாப்பு இணைப்புகளை உறுதியளிக்கிறது. கேமரா பிரிவில் மட்டும் Aquas Sense 8 இன் இரட்டை பின்புற கேமராவை கொண்டுள்ளது.
  • இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) உடன் 50 MP பிரைமரி சென்சார் மற்றும் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 8 MP சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஷார்ப் அக்வாஸ் சென்ஸ் 8 (Sharp Aquas Sense 8) Rate :

  • நம் இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ.34,700 விலையில் கிடைக்கிறது. ஷார்ப் அக்வாஸ் சென்ஸ் 8 சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இது 6.1′ இன்ச் முழு HD+ கொண்ட (2,400 x 1,080 பிக்சல்கள்) IGZO OLED டிஸ்ப்ளே வசதியை கொண்டுள்ளது.
  • இது ஷார்ப் அக்வாஸ் சென்ஸ் 8 டிஸ்பிலேவை 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் வழங்குகிறது. இது 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் இயங்குகிறது.

ஷார்ப் அக்வாஸ் சென்ஸ் 8 (Sharp Aquas Sense 8) Battery :

  • ஷார்ப் அக்வாஸ் சென்ஸ் 8 ஆனது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 10 மணிநேரம் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5G, Wi-Fi 5, NFC மற்றும் புளூடூத் 5.1 போன்ற இணைப்புகளை ஆதரிக்கிறது. பாதுகாப்பிற்காக ஃபோனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.
  • இதில் 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது. கைபேசி IP68 மதிப்பீடு மற்றும் MIL-STD-810G சான்றிதழுடன் வருகிறது. மேலும் இந்தியாவில் அக்டோபர் மாதம் இறுதிக்குள் Sharp Aquas Sense 8 போன் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply