Shashank Singh, சூர்யகுமார் யாதவ் போன்று வருவார் | ஆகாஷ் சோப்ரா கணிப்பு

சென்னை :

சூர்யகுமார் யாதவ் போல் பஞ்சாபின் நட்சத்திர வீரர் Shashank Singh-கும் வருவார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு வெளியே இருக்கும் அவர்கள் அடுத்து ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளை எதிர்கொள்கிறார்கள்.

வழக்கம் போல் இந்த சீசனிலும் பஞ்சாப் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் சில அசாத்தியமான போட்டிகளில் வெற்றி பெற்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது பஞ்சாப் அணி. குறிப்பாக Shashank Singh மற்றும் அசுதோஷ் சர்மாவின் ஆட்டம் பலரையும் கவர்ந்துள்ளது. பஞ்சாப் அணி குறித்து பேசிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்த சீசனில் பஞ்சாப் அணியின் 3 வீரர்கள் மட்டுமே என் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

Shashank Singh :

அந்த பட்டியலில் ஷஷாங்க் சிங் முதலிடத்தில் உள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்துள்ளார். இவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று பலரும் கூறுவார்கள். Shashank Singh 22 வயது இளைஞனும் அல்ல 25 வயது இளைஞனும் அல்ல. அவர் சற்று மூத்த வீரர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவம் உள்ளவர். கூர்ந்து கவனித்தால் கூட அவர் ஸ்டைலில் சூர்யகுமார் யாதவ் போல் இருக்கிறார்.

30 வயதுக்கு மேல் இந்திய அணியில் முதலில் நுழைந்தவர் சூர்யகுமார் யாதவ். அவரைத் தொடர்ந்து அசுதோஷ் ஷர்மா. பும்ராவுக்கு எதிராக அசுதோஷ் சர்மா அடித்த ஸ்வீப் ஷாட் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. பஞ்சாப் அணியில் தொடர்ந்து நீடித்தால், அடுத்து வரும் சீசன்களில் நிச்சயம் பெரிய அளவில் வளர்ச்சியடைவார்கள் என்றார். இந்த சீசனில் நடந்த ஏலத்தில் Shashank Singh தவறுதலாக பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். ஆனால் பஞ்சாப் அணி அவரது திறமையை அறிந்து முதல் போட்டியிலேயே களமிறக்கியது. சிறப்பாக விளையாடிய ஷஷாங்க் சிங் 12 போட்டிகளில் 352 ரன்கள் குவித்துள்ளார். இதன் காரணமாக Shashank Singh பஞ்சாப் அணியில் தக்கவைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

Latest Slideshows

Leave a Reply