Shiva Rajkumar In Thalapathy 69 : தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் (Shiva Rajkumar In Thalapathy 69) நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தளபதி 69

நடிகர் விஜய் ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் சினிமா என இரு துறைகளில் விளையாடி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை முடித்துவிட்டு விஜய் தனது கடைசி படத்தின் (Shiva Rajkumar In Thalapathy 69) படப்பிடிப்பில் இணைந்துள்ளார். எச்.வினோத் இயக்கும் இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு  இசைமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே, கௌதம் மேனன், பாபி தியோஸ், நரேன், பிரியா மணி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். முதற்கட்டமாக படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதையடுத்து சிறிய இடைவெளிக்கு பின் நவம்பர் 3ம் தேதி படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. இந்த ஆண்டு இறுதி வரை படப்பிடிப்பு நடக்கவுள்ளது. உரையாடல் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

நடிகர் விஜய் படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க அரசியலில் இறங்கி கவனம் செலுத்தப் போவதால் இந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்கவுள்ளார். இந்தப் படம் அவரது கடைசிப் படம் என்று கூறப்படுவதால் தமிழ் சினிமாவில் நிச்சயம் மறக்க முடியாத படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் (Shiva Rajkumar In Thalapathy 69) ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடிக்க வேண்டும். இடைவேளையின்றி குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் படத்தை முடிக்க விஜய் வினோத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே வேகமாக படங்களை இயக்கி வரும் வினோத் தற்போது படப்பிடிப்பை முழு வீச்சில் தொடங்கியுள்ளார்.

தளபதி 69 படத்தில் சிவராஜ் குமார் (Shiva Rajkumar In Thalapathy 69)

இந்த நிலையில் தளபதி 69 படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய சிவராஜ் குமார் ‘தளபதி 69’ படத்தில் ஒரு அழகான கேரக்டரில் நடிப்பதற்கு (Shiva Rajkumar In Thalapathy 69) எனக்கு அழைப்பு வந்தது. என்னுடைய தேதிகள் காரணமாக அது எப்படி நடக்கும் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். மேலும் விஜய் ஒரு நல்ல நடிகர் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விஜய் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் விஜயின் தளபதி 69 படத்திலும் நடித்து நல்ல வரவேற்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Latest Slideshows

Leave a Reply