Shock for Chennai Super Kings - Mushtabiqur Rahman Injured : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி - முஷ்தாபிகுர் ரஹ்மான் காயம்

சென்னை :

ஐ.பி.எல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வங்கதேச வீரர் முஷ்தாபிகுர் ரஹ்மான் இலங்கைக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்தது (Shock for Chennai Super Kings – Mushtabiqur Rahman injured) ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டியில் சென்னை மற்றும் ஆர்சிபி அணி போட்டியிடுகிறது. டிக்கெட் விற்பனை ஏற்கனவே துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முஷ்தாபிகுர் ரஹ்மான் :

2008ல் சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி வெற்றி பெற்றது. அதன் பிறகு RCB 15 ஆண்டுகளில் ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. இதனால் முதல் போட்டியில் RCB அணி வரலாற்றை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே சிஎஸ்கே அணி வீரர்கள் காயம் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

சி.எஸ்.கே தொடக்க ஆட்டக்காரர் கான்வேயின் இடது முன்கையில் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் 5 வாரங்களுக்கு அவரால் எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க முடியாது, எனவே அவர் மே மாதம் சிஎஸ்கே அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், நட்சத்திர பந்துவீச்சாளர் பத்திரனாவுக்கும் வலது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயம் முழுமையாக குணமடைய 4 வாரங்கள் ஆகும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் இரண்டு நட்சத்திர வீரர்களின் இடத்தை சிஎஸ்கே அணி எப்படி நிரப்பும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது இலங்கை அணி வங்காளதேசத்திற்கு எதிராக ஒரு நாள் தொடர் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் பந்துவீசும்போது வங்கதேச வீரர் முஷ்டாபிகுர் ரஹ்மான் (Shock for Chennai Super Kings – Mushtabiqur Rahman injured) காயமடைந்தார்.

நடக்க முடியாத அளவுக்கு கால்கள் இறுகியதால் பிசியோக்கள் அவரை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதை பொறுக்க முடியாமல் முஷ்டாபிகுர் ரஹ்மான் மைதானத்தில் அலறி துடித்தார். இதனால் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முஷ்தாபிகுர் ரஹ்மானும் காயம் அடைந்துள்ளதால் சிஎஸ்கே அணி பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. இதனால் வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சிஎஸ்கே அணி களமிறங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

டிக்கெட் விற்பனை :

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான முதல் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஓராண்டுக்குப் பிறகு தோனி மீண்டும் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து வருவதைப் பார்க்க பல சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதுமட்டுமின்றி, தோனி விண்டேஜ் ஹேர்ஸ்டைலில் விளையாடவுள்ளதால், அவரை நேரில் பார்க்க ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், ஐபிஎல் தொடருக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஆண்டை போல் நேரடியாக இல்லாமல், உலக கோப்பை தொடரை போல் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 2 நாட்களுக்கு முன் மார்ச் 18ம் தேதி காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் Paytm Insider ஆப் மற்றும் CSK அணியின் இணையதளத்தில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 38000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய மைதானத்தின் டிக்கெட்டுகள் இன்று விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மார்ச் 18ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சிஎஸ்கே – ஆர்சிபி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே கூட்டம் அதிகமாக இருந்ததால் ரசிகர்கள் பலர் உடனடியாக டிக்கெட் எடுக்க முடியாமல் தவித்தனர். இதையடுத்து டிக்கெட் விற்பனை பக்கம் சென்றால் 10 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், உலகக் கோப்பை தொடரில் டிக்கெட் விற்பனை என்ற பெயரில் பிசிசிஐ மாயமான வேலையை செய்தது போல் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர், அதே போல் டிக்கெட் விற்பனை என்ற பெயரில் டிக்கெட் விற்பனையை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply