Shot Boot Three Official Trailer : ஷாட் பூட் த்ரீ படத்தின் டிரைலர் வெளியீடு

Shot Boot Three Official Trailer :

தளபதி 68 படத்தை இயக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் “ஷாட் பூட் த்ரீ” படத்தின் டிரைலர் தற்போது (Shot Boot Three Official Trailer) வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு தனது தனித்துவமான பொழுதுபோக்கு படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி படத்தை தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினார். இதையடுத்து வெங்கட் பிரபு அடுத்ததாக தளபதி விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கவுள்ளார். முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக உலகின் முன்னணி VFX நிறுவனங்களில் ஒன்றான USC ICT நிறுவனத்துடன் தளபதி 68 படக்குழு இணைந்துள்ளது. தளபதி 68 குழுவினர் தற்போது உயர்தர VFX பணிகளுக்காக USC ICT நிறுவனத்துடன் இணைந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. அடுத்த அறிவிப்புகள் லியோ படத்தின் வெளியிட்டிற்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் புதிய திரைப்படம் தான் ஷாட் பூட் த்ரீ. அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அருணாசலம் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிகை சினேகா, நடிகர் யோகி பாபு மற்றும் குழந்தை நட்சத்திரங்களான பூவையார், கைலாஷ் ஹீட், ப்ரணித்தி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க சிவாங்கி, வேதாந்த் வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முக்கிய பாத்திரங்களில். சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்திருக்கும் ‘ஷாட் பூட் த்ரீ’ படத்திற்கு ராஜேஷ் வைத்தியா இசையமைக்கிறார். ஷாட் பூட் த்ரீ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘ஷாட் பூட் த்ரீ’ படத்தின் டிரைலர் (Shot Boot Three Official Trailer) தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply