Shreyas Iyer Failed Again : எத்தனை வாய்ப்பை தான் வீணடிப்பார்?

விசாகப்பட்டினம் :

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களில் டாம் ஹார்ட்லி பந்தில் (Shreyas Iyer Failed Again) ஆட்டமிழந்தார். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1க்கு 0 என முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்டில் அறிமுக வீரராக ரஜத் பட்டிதார் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கில் ஸ்ரேயாஸ் ஆகியோர் முதல் டெஸ்டில் சொற்ப வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பெரிய ஸ்கோரை எட்ட வேண்டிய நெருக்கடியில் இருந்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபாரமாக ரன் சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் வந்தவுடன் வெளியேறினர்.

Shreyas Iyer Failed Again :

கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களிலும், நட்சத்திர வீரர் கில் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடும் நெருக்கடியில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், 2022ல் இருந்து ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இது ஸ்ரேயாஸ் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் அவரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஸ்ரேயாஸுக்கு பதிலாக சர்பிராஸ் கானை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடும் அழுத்தத்தில் விளையாடிய ஐயர் 59 பந்துகளுக்கு 3 பவுண்டரிகள் மட்டும் எடுத்து 27 ரன்கள் சேர்த்தார். மேலும் டாம் ஹார்ட்லியின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டம் இழந்தார். இதனால் முக்கியமான கட்டத்தில் ஸ்ரேயாஸ் 27 ரன்களில் (Shreyas Iyer Failed Again) ஆட்டமிழந்தார். அவரை விட அறிமுக வீரர் ரஜத் பட்டிதார் அதிக ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் போன்ற சீனியர் வீரர்கள் தொடர்ந்து களமிறங்குவதால் இந்திய அணி பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களை எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply