SIDBI Recruitment 2024 : சிட்பி வங்கியில் 72 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சிட்பி வங்கி Small Industries Development Bank Of India (SIDBI) உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த வங்கியில் உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களை (SIDBI Recruitment 2024) நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SIDBI Recruitment 2024

1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

சிட்பி (SIDBI) வங்கியில் இந்த உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு 72 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கல்வி தகுதி (Educational Qualification)

சிட்பி (SIDBI) வங்கியில் இந்த உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் (SIDBI Recruitment 2024) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் பொருளாதாரம், வணிகவியல், கணிதம் பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும், இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. வயது தகுதி (Age)

சிட்பி (SIDBI) வங்கியில் இந்த உதவி மேலாளர் (Assistant Manager) பதவிக்கு (SIDBI Recruitment 2024) 21 வயது முதல் 30 வயதிற்குள் மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு விதிகளின்படி அந்தந்த பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

4. சம்பளம் (Salary)

இந்த உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.44,000/- முதல் ரூ.89,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

சிட்பி (SIDBI) வங்கியில் இந்த உதவி மேலாளர் (Assistant Manager) பதவிக்கு (SIDBI Recruitment 2024) இரண்டு ஆன்லைன் தேர்வுகளின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வானது இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. விண்ணப்பிக்க கட்டணம் (Application Fees)

இந்த உதவி மேலாளர் (Assistant Manager) பதவிக்கு தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ1100 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் SC/ST பிரிவினருக்கு ரூ.175 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)

சிட்பி (SIDBI) வங்கியில் இந்த உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு வரும் 02.12.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

8. மேலும் விவரங்களுக்கு

https://www.sidbi.in/head/uploads/career_document/SIDBI-DETAILED-WEB-ADVT-08112024.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply