Siddha Company Launch In Malaysia : மலேஷியாவில் சித்தா மருந்துகள் தயாரிப்பு நிறுவனம் துவங்குவது தொடர்பாக ஆலோசனை

Siddha Company Launch In Malaysia :

தமிழகம் வந்துள்ள மலேஷிய நாட்டின் பிரதமர் அலுவலக துணை அமைச்சர் எம்.குலசேகரன், தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களை பார்வையிட்டு வருகிறார். மேலும், மலேஷிய நாட்டின் பிரதமர் அலுவலக துணை அமைச்சர் எம்.குலசேகரன், ‘இம்ப்காப்ஸ்’ மருந்து தயாரிப்பு தொழிற்சாலையையும் பார்வையிட்டார். மலேஷியாவில் சித்தா, மருந்துகள் தயாரிப்பு நிறுவனம் துவங்குவது தொடர்பாக (Siddha Company Launch In Malaysia) மலேஷிய நாட்டின் பிரதமர் ‘இம்ப்காப்ஸ்’ நிறுவன தலைவர் கண்ணனுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையையும் பார்வையிட்டார்.

சித்தா, ஆயுர்வேதா, யோகா, ஓமியோபதி மற்றும் யுனானி மருந்துகள் ஆகியவை பக்க விளைவுகள் இல்லாத நீடித்த நிவாரணம் அளிக்கும் இயற்கை மருத்துவம் ஆகும். சென்னை திருவான்மியூரில் உள்ள, ‘இம்ப்காப்ஸ்’ நிறுவனமானது மத்திய அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும், பன்மாநில கூட்டுறவு நிறுவனமாக உள்ளது. இந்த ‘இம்ப்காப்ஸ்’ நிறுவனத்தில் 1,200 வகையான சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருந்துகள் ஆனது தயாரிக்கப்படுகின்றன. இந்த ‘இம்ப்காப்ஸ்’ நிறுவனத்தில் அரசு பதிவு பெற்ற டாக்டர்கள் மொத்தம் 17,500 பேர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

மலேஷியாவில் சித்தா மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்தை துவக்குவது குறித்து, இம்ப்காப்ஸ் நிறுவன தலைவர் கண்ணன் கூறியதாவது :

  • மலேஷிய நாட்டின் பிரதமர் அலுவலக துணை அமைச்சர் எம்.குலசேகரனுடன் ஆலோசனை நடத்தினோம்.
  • மலேஷியா நாட்டிற்கு ‘இம்ப்காப்ஸ்’ நிறுவனத்தில் இருந்து சித்தா மருந்து ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ‘இம்ப்காப்ஸ்’ நிறுவனத்தில் தயாரிக்கப்படுகின்ற மருந்துகள், துணை உணவு பொருட்கள் மற்றும் துணை சுகாதார மருந்துகள் ஆனது மலேஷியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும்.
  • அத்துடன், மலேஷிய நாட்டின் பிரதமர் இந்திய மருத்துவ முறை சிகிச்சையை அறிந்து கொள்ளவும், மலேஷிய மக்களிடம் அவற்றை கொண்டு சேர்க்கவும், ‘இம்ப்காப்ஸ்’ நிறுவனத்திடம் ஆலோசனை நடத்தி உள்ளார்.
  • மலேஷியா நாட்டினர், ‘இம்ப்காப்ஸ்’ மூலம் தேவையான சிகிச்சை பெறவும் மற்றும் தேவைப்பட்டால் நம் டாக்டர்கள் மலேஷியா நாட்டிற்கு சென்று அங்கு பயிற்சி அளிக்கவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

Latest Slideshows

Leave a Reply