Siddharth 40th Movie Pooja : நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படத்தின் பூஜை தொடக்கம்

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த்தின் 40வது படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.

Siddharth 40th Movie Pooja :

சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சித்தார்த் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சித்தா படத்தின் மூலம் வலுவான மறுபிரவேசத்திற்குப் பிறகு, அவர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக சித்தார்த்தின் 40வது படத்திற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இந்த படத்தை குருதி ஆட்டம், எட்டுத் தோட்டாக்கள் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்ரீ கணேஷ் படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் (Siddharth 40th Movie Pooja) நடைபெற்றது. இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, சைத்ரா அசார், மீத்தா ரகுநாத் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நடந்த பட பூஜையில் இயக்குனர் வெங்கட் பிரபு, ராம், நிதிலன் சுவாமிநாதன், மடோன் அஸ்வின், ரவிக்குமார், எழுத்தாளர் நரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மிஸ் யூ :

இது தவிர சித்தார்த் நடித்த இன்னொரு படம் மிஸ் யூ. இந்த படத்தில் பிரபல தெலுங்கு மற்றும் கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். களத்தில் சந்திப்போம், மாப்ள சிங்கம் ஆகிய படங்களின் இயக்குனர் N.ராஜசேகர் இயக்கியுள்ள இப்படம் காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை என முழு நீள பொழுதுபோக்கு படமாக தயாராகியுள்ளது. தமிழ்நாட்டில் பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் முன்னோடியாகத் திகழும் ‘7 மைல்ஸ் பர் செகண்ட்’ சார்பில் சாமுவேல் மேத்யூ இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

அனுபமா, நரேன், ஜே.பி, பொன்வண்ணன், பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கும் நிலையில், ஹீரோ, ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இல்லாமல், நகைச்சுவை மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்படம் கலகலப்பாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply