SIIMA 2023 : சைமா விருது வழங்கும் விழாவில் விருது வென்றவர்களின் முழு விவரங்கள் அறிவிக்கப்பட்டது.

SIIMA 2023 :

சைமா 2023 விருது வழங்கும் விழாவில் விருது வென்றவர்களின் முழு விவரங்கள் அறிவிக்கப்பட்டது. தற்போது அவற்றை காணலாம். தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான விருதுகளில் ஒன்றாக SIIMA உள்ளது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடைபெறும். இதையடுத்து 11வது SIIMA விருது வழங்கும் விழா துபாயில் (SIIMA 2023) கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில் விழாவில் விருது பெற்றவர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தொகுப்புகளின் முழு விவரங்களை (SIIMA 2023) காணலாம்.

இப்போது விருது பெற்றவர் யார் என்று பார்ப்போம். முதலில் 2022ல் அறிமுகமாகி புதுமுகங்கள் பெற்ற விருதுகளைப் பார்ப்போம். அதன்படி கோமாலியை இயக்கி வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் நடித்ததற்காக பிரதீப் ரங்கநாதன் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதைப் பெற்றார். அதேபோல் கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி சங்கர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார். லவ் டுடே படத்திற்காக யோகி பாபு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதையும், டான் படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா எதிர்மறை வேடத்தில் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றனர். அதேபோல் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை கார்கி படத்திற்காக காலி வெங்கட் மற்றும் விக்ரம் படத்தில் நடித்த வசந்தி ஆகியோர் பெற்றனர். Rocketry படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மாதவனுக்கு சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றார்.

கடந்த ஆண்டை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றன. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா, காயத்ரி மற்றும் பலர் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் சுமார் 420 கோடிகளை வசூலித்தது. சைமா விருதுகளிலும் இப்படம் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் ரூ.500 கோடி வசூல் செய்து விக்ரம் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் படமாக உருவெடுத்தது. இந்த படம் விக்ரம் படத்தைவிட ஒரு விருது கூடுதலாக எடுத்து முதலிடத்தில் உள்ளது.

விக்ரம் பெற்ற விருதுகள் :

உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்துக்காக SIIMA 2023 இல் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த பாடகர் என இரண்டு விருதுகளைப் பெற்றார். மேலும், சிறந்த இயக்குனருக்கான விருது லோகேஷ் கனகராஜுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது டினாவுக்கும் கிடைத்தது. சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர்.ரகுமானிடம் செல்லாமல் அனிருத்துக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் விக்ரம் படம் 5 விருதுகளுடன் மாஸ் காட்டியது.

பொன்னியின் செல்வன் பெற்ற விருதுகள் :

சிறந்த படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது த்ரிஷாவுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ரவி வர்மாவுக்கும், சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது தோட்டாதரணிக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது இளங்கோ கிருஷ்ணாவுக்கும், சிறந்த சாதனையாளர் விருது மணிரத்னத்துக்கும் கிடைத்தது. SIIMA 2023 விருது வழங்கும் விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 விருதுகளை பெற்று முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Latest Slideshows

Leave a Reply