Simbu Biriyani Treat To Fans: ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக தன்மை கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த சிம்பு 2019ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன் ‘ படத்தில் தனது உடல் எடை காரணமாக பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தார் நடிகர் சிம்பு. அதன் பிறகு தீவிர உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்தார். இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்தார். அதையடுத்து ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை தொடர்ந்து மார்ச் 30ஆம் தேதி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த ‘பத்து தல’ படம் வெளியாகி அவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு, ரசிகர்களுக்கான படங்களில் தொடர்ந்து நடிப்பேன், இனி கவலைப்பட வேண்டாம். படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் ‘பத்து தல’ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் சிம்பு தனது படங்களின் வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்கள் மன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசினார். அதுமட்டுமின்றி ரசிகர்களுக்கு தன் கையாலேயே பிரியாணியும் பரிமாறினார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் திரளான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் உரையாடி புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். நடிகர் சிம்பு பிரியாணி பரிமாறும் விடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply