Singer Susheela Got Doctorate : திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு முதல்வர் ஸ்டாலின் டாக்டர் பட்டம் வழங்கினார்

சென்னையில் 21/11/2023 நேற்று தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆனது நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு மற்றும் இசையியல் அறிஞர் பி.எம்.சுந்தரம் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் (Singer Susheela Got Doctorate) வழங்கினார்.

Singer Susheela Get Doctorate - இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் மேடையில் ஆற்றிய உரை :

இந்த பட்டமளிப்பு விழாவில் பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின் தான் பி.சுசீலாவின் ரசிகன் என்று கூறி பி.சுசீலா அவர்கள் பாடிய ‛‛நீ இல்லாத உலகத்திலேயே… உன் நினைவு இல்லாத இதயத்திலே சிந்தனை இல்லை.. காயும் நிலா வானில் வந்தால் கண் உறங்க வில்லை.. உன்னை கண்டுக்கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை” எனும் பாடலை பாடி அனைவரையும் கவர்ந்தார். பாடகி சுசீலா அவர்களின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது என்றும் அதில் தானும் ஒருவர் என்றார். வெளியூர்களுக்கு இரவு நேரத்தில் தான் பயணிக்கும்போது பாடகி சுசீலா அவர்களது பாடல்களை காரில் கேட்டு கொண்டே செல்வதாகவும் அதில் தனக்கு ரொம்ப பிடித்த பாட்டு என்றால் இதுதான் என்றும் தான் இந்த பாடலை அடிக்கடி பல இடங்களில் பாடியுள்ளதாகவும் கூறினார். அதனால்தான் தான் மேடைக்கு வந்தவுடன் பாடகி சுசீலா அம்மையாரை பார்த்து “நான் உங்கள் ரசிகன் என்று வெளிப்படையாகவே சொன்னதாகவும்” கூறினார்.

பட்டம் வாங்க வந்திருந்த பாடகி பி.சுசீலா மேடையில் போடப்பட்டு இருந்து இருக்கையில் அமர்ந்திருந்தார். முதல்வர் ஸ்டாலின் டாக்டர் பட்டம் வழங்க (Singer Susheela Got Doctorate) பாடகி பி.சுசீலா அருகே சென்றபோது எழுந்த பாடகி பி.சுசீலா நிலைத்தடுமாறி தனது இருக்கையில் விழுந்தார். அந்த சமயத்தில் முதல்வர் ஸ்டாலினின் பி.சுசீலா கையை இறுக பிடித்தார். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் மற்றும் மறுப்பக்கம் நின்ற அமைச்சர் சாமிநாதன் ஆகியோரின் கைகளை பிடித்து மீண்டும் எழுந்து நின்று பி.சுசீலா கவுரவ டாக்டர் பட்டத்தை (Singer Susheela Got Doctorate) பெற்றார். தற்போது இணையதளங்களில் இது தொடர்பான வீடியோ ஆனது வெளியாகி வைரலாகி பரவி வருகிறது.

இந்தியாவில் இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் :

இந்தியாவில் இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்துக்கு மட்டும்தான் உண்டு என்றும் இந்த பல்கலைக்கழகம் ஆனது முழுக்க முழுக்க தமிழ்நாடு மாநில நிதியில் செயல்படுகிறது என்றார். அதனால் தான் தமிழ்நாடு மாநில முதல்வரே இந்த இசை பல்கலைக்கழகத்துக்கு வேந்தராக இருக்கும் உரிமை உள்ளது என்றார். மாநில முதல்வரே வேந்தராக இருந்தால் தான் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும் மற்றும் சிறப்பாக இயங்கும்.

அதனால் தான் 2013ம் ஆண்டில் முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்த பல்கலைக்கழகத்தின் நோக்கம் ஆனது சிதைந்து போய்விடக் கூடாது என்று கருதி இவ்வாறு முடிவு செய்துள்ளார்.  நாம் இதற்காக அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களை மனதாரா பாராட்டலாம். நானும் அவரை மனதாரா பாராட்டுகிறேன். இது ஒரு அரசியல் பேச்சல்ல, இது ஒரு யதார்த்த பேச்சு என்றார். 2 இசை மேதைகளுக்கு இந்த தமிழ்நாடு இசை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் (Singer Susheela Got Doctorate) கொடுத்து பெருமைப்படுத்தி உள்ளது என்றும் இதன்மூலம் டாக்டர் பட்டமும் பெருமையடைகிறது என்றும் கூறினார்.

பி.சுசீலா - ஒரு குறிப்பு :

Singer Susheela Got Doctorate : கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற பி.சுசீலா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு 87 வயது ஆகிறது. “ஆசிய புக் ரெக்கார்ட்ஸ்” மற்றும் ‛கின்னஸ்’ புத்தகத்திலும் இவரது பெயர் இடம்பிடித்துள்ளது. மேலும் இவர் பத்மபூஷன் விருது மற்றும் ஏராளமான விருதுகளை வாங்கி குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Latest Slideshows

Leave a Reply