Siren Box Office Day 2 : பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் சைரன். ஆண்டனி பாக்யராஜ் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சைரனும் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வசூலித்துள்ளது. அதன்படி, முதல் நாளை விட இரண்டாவது நாளில் சைரன் அதிக வசூலை (Siren Box Office Day 2) பெற்றுள்ளது. ஜெயம் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ‘ஜெயம் ரவி’, தற்போது கோலிவுட்டில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். ஜெயம் ரவி தனது பெரும்பாலான படங்களில் சாக்லேட் பாய் கேரக்டரில் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பேராண்மை, தனி ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் ஜெயம் ரவியின் கேரியரில் மைல் கல்லாக அமைந்தது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மன் வேடத்தில் நடித்த ஜெயம் ரவி, தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.

முக்கியமாக கமல் – மணிரத்னம் தயாரிக்கும் தக் லைஃப் படத்திலும் அவர் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அகிலன், இறைவன் போன்ற தோல்விப் படங்களை கொடுத்த ஜெயம் ரவி தற்போது சைரன் படத்தின் மூலம் மீண்டும் வந்துள்ளார். இந்த வாரம் வெளியான சைரன் ஜெயம் ரவி மார்க்கெட்டில் கொஞ்சம் புயலை கிளப்பியுள்ளது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சைரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயம் ரவியுடன் அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

Siren Box Office Day 2 :

ஆக்‌ஷன் ப்ளஸ் சென்டிமெண்ட் என கமர்சியலாக உருவாகியுள்ள சைரன் நல்ல திரைக்கதையுடன் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சைரன் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மாஸ் காட்டி வருகிறது. சைரன் முதல் நாளில் நல்ல ஓப்பனிங்கை பெற்று ரூ.1.40 கோடி வரை வசூல் செய்தது. இதனால் இரண்டாம் நாளான சனிக்கிழமை வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், சனிக்கிழமையான நேற்றும் சைரன் வசூல் அதிகரித்துள்ளது. சைரனின் இரண்டாம் நாள் வசூல் ரூ.1.73 கோடி என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் (Siren Box Office Day 2) தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.3.13 கோடி வசூல் செய்துள்ளது சைரன். ஜெயம் ரவி நடித்த அகிலன், இறைவன் படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply