Siren Movie Review : ஜெயம் ரவியின் சைரன் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கிய ‘சைரன்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் வெளியான சைரன் படத்தின் சிறப்பு காட்சி காலை 9:00 மணிக்கு தொடங்கியது. இந்த அறிவிப்பை ஜெயம்ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக, சைரன் படம் காலை 10:00 மணிக்கு தொடங்கும் என்று ரெட் ஜெயண்ட் அறிவித்தது. ஆனால், சில திரையரங்குகளில் படம் 9:00 மணிக்கு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சைரன் திரைப்படத்தின் விமர்சனத்தை (Siren Movie Review) தற்போது காணலாம்.

படத்தின் கதை :

ஆம்புலன்ஸ் டிரைவரும், செய்யாத குற்றத்துக்கு ஆயுள் கைதியுமான ஜெயம் ரவி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு 14 நாட்கள் பரோலில் வீட்டுக்கு வருகிறார். வீட்டில் உள்ள அனைவரும் அவரைப் பார்க்க விரும்பும்போது, ​​​​ஜெயம் ரவியின் மகள் “கொலைகார அப்பாபை பார்க்க மாட்டேன்” என்று வீட்டை விட்டு வெளியேறுகிறார். பரோலில் வந்து தன் குடும்பத்தை பார்ப்பது மட்டுமின்றி, தன்னை 14 ஆண்டுகள் சிறையில் இருக்க காரணமானவர்களை பழிவாங்கவும் முயல்கிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? என்பதுதான் படத்தின் கதை.

Siren Movie Review :

நடுத்தர வயது கதாபாத்திரத்திற்கு ஜெயம் ரவி கச்சிதமாக பொருந்துகிறார். திலகனின் பாத்திரம், அவரது நடிப்பு மற்றும் உரையாடல் மூலம் பார்வையாளர்களின் மனதில் ஒரு முத்திரையை பதிக்கிறது. ஜெயம் ரவியின் கேரக்டர் அறிமுகத்தின் முதல் 10 நிமிடம் எனக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனை நினைவூட்டியது. ஜெயம் ரவியின் மகள் யுவினா பார்வதியின் நடிப்பு ஓகே, கொலைகார அப்பாவை பார்க்க மாட்டார். ஆனால், மகளைப் பிரிந்து வாழும் தந்தையின் ஏக்கத்தைக் காட்டியிருக்கிறார் ஜெயம் ரவி. கீர்த்தி சுரேஷ் ஒரு சீரியஸ் போலீஸ் அதிகாரி என்பதை சிரிக்காமல் நடித்துள்ளார். ஜெயம் ரவியுடன் ஷேடோ போலீசாக பயணிக்கும் யோகி பாபு பல  இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். பிளாஷ்பேக்கில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா நடிக்கிறார். இவர் ஜெயம் ரவியின் ஜோடியா அல்லது மகளா என்று வியக்கும் அளவுக்கு இந்த ஜோடி பொருந்தவில்லை. அம்மாவாக நடித்திருக்கும் துளசி, கொடுக்கப்பட்ட சில காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

Siren Movie Review : ஜி.வி.பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் இணக்கமாக உள்ளன. செல்வகுமாரின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. முடிந்தவரை படத்திற்கு பலம் சேர்க்க முயற்சி செய்திருக்கிறார் ரூபன். கலை இயக்குனர் சக்தி வெங்கடராஜ், கிடைக்கும் இடங்களில் எல்லாம் கைவண்ணம் தீட்டியுள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமா தொடாத கதையை, பவர்ஃபுல் டயலாக்குகளால் நுணுக்கமாக கையாள முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ். திரைக்கதையில் மட்டும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் இயக்குனர் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருப்பார். சென்டிமென்ட் காட்சிகள், தரமான டயலாக்குகள், இசை, ஒத்துப்போகாத திரைக்கதை என இருந்தாலும் குடும்பத்துடன் சென்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சைரன் திருப்தி தரும் (Siren Movie Review) படமாக இருக்கும்.

Latest Slideshows

Leave a Reply