Siren Trailer : ஜெயம் ரவியின் சைரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள சைரன் படத்தின் ட்ரெய்லர் (Siren Trailer) தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள படம் சைரன் ஆகும். ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி நடித்த ‘இறைவன்’ படம் ஏமாற்றத்தை அளித்தது. இதற்கு முன்னதாக வெளியான ‘அகிலன்’ படமும் அவருக்கு வேலை செய்யவில்லை. இந்த சூழலில் ஜெயம் ரவி  நடிப்பில் அடுத்ததாக இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் ட்ரெய்லர் (Siren Trailer) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சைரன் படத்தின் ட்ரெய்லர் (Siren Trailer) தற்போது வெளியாகியுள்ளது.

Siren Trailer :

படத்தின் முழு ட்ரெய்லரும் விறுவிறுப்பாக நடப்பதாக காட்டப்பட்டுள்ளது. “நிறைய கேஸ்ல டாக்டர் சொல்லுறது, 5 நிமிஷம் முன்னதாகவே கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அந்த 5 நிமிஷம் நம் கையில தான் இருக்கு” என்ற வசனத்தின் மூலம் ஜெயம் ரவி ஆம்புலன்ஸ் டிரைவர் என்பதை புரிந்து கொள்ளலாம். அவர் சிறையில் இருந்து வெளியே வரும்போது, கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் போராட்டமாகத் தெரிகிறது.

ட்ரெய்லருக்கு இடையில் ஜெயம் ரவியின் திருமணம், குழந்தை பிறந்த காட்சிகள், ஜெயம் ரவியை கொலைகாரன் என்று சொந்த மகளால் நிராகரிக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன. கொலைகாரனை கண்டுபிடிக்கும் வழக்கில் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் கீர்த்து சுரேஷ், தன் தந்தை ஜெயம் ரவியை கேவலப்படுத்துகிறார். ஜெயம் ரவியை அவரது மகள் கொலையாளியாக விசாரிக்கும் காட்சியில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஜெயம் ரவி அப்பாவாகவும், கீர்த்தி சுரேஷ் மகளாகவும், அவரை எதிர்க்கும் போலீஸ் வேடத்திலும் நடிக்கின்றனர். இருவருக்குமான போட்டியின் சைரன் ஒலி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply