Sivakarthikeyan Donates 10 Lakhs To Relief Fund : நிவாரண பணிகளுக்கு சிவகார்த்திகேயன் நிதியுதவி

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி (Sivakarthikeyan Donates 10 Lakhs To Relief Fund) அளித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் :

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 27 ஆம் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டது. இந்த புயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னையில் பலத்த காற்று வீசியது மட்டுமின்றி, இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால், ஏரி குளங்கள் நிரம்பி, சென்னையில் உள்ள குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் சென்னையில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. ஒருபுறம் பலர் வேலைக்குச் செல்ல முடியாமல் திணற, எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. கனமழை காரணமாக சென்னை தண்ணீரில் மூழ்கியது. தி.நகர் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, வடபழனி முருகன் கோவில் குளம், அண்ணாநகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என அனைத்தும் வெள்ளக்காடாக மாறியது.

மிக்ஜாம் புயலானது ஒருவழியாக ஆந்திராவில் கரையைக் கடந்தது. இருப்பினும் பாதிப்பு கடுமையாக இருந்தது. மழைக்கு மறுநாளே சென்னையின் முக்கிய சாலைகளில் தேங்கிய மழை நீர் வடிந்தது. ஆனால், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் வடியாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் உதவி செய்தனர். பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வற்றியதால் சென்னை மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகம் பங்களிப்பு :

இந்தப் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்ய திரையுலகில் இருந்து உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் சூர்யா, கார்த்தி, ஹரிஷ் கல்யாண், கலக்கப்போவது யாரு பாலா உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தனர். விஜய் மக்கள் இயக்கமும் களம் இறங்கி நிவாரணப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டது.

Sivakarthikeyan Donates 10 Lakhs To Relief Fund :

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் நிதியுதவி (Sivakarthikeyan Donates 10 Lakhs To Relief Fund ) அளித்துள்ளார். அதன்படி, மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து (Sivakarthikeyan Donates 10 Lakhs To Relief Fund) வழங்கியுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

This Post Has 4 Comments

  1. Ravi

    I really love your site, Excellent

  2. David

    Hi there, yes this article is in fact pleasant and I have learned lot
    of things from it conerning blogging. thanks.

Leave a Reply