Sivakarthikeyan In SK21: கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் பூஜையுடன் தொடக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் SK 21 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது குறித்த விடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவில் கமல்ஹாசன் கிளாப் அடித்து படத்தின் முதல் ஷாட்டை தொடங்கி வைத்துள்ளார். 50 வினாடிகள் ஓடும் இப்படத்தின் பூஜை வீடியோவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். வெளியான இந்த விடியோவை பார்த்து ரசிகர்கள் மற்றும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது, தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் “மாவீரன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் ‘அதிதி ஷங்கர்’ நடிக்கிறார். மேலும் சுனில், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ‘மாவீரன்’ திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடுவதாக படக்குழுதெரிவித்துள்ளது.

‘மாவீரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தன்னுடைய 21வது படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாகவும், ஜி.வி.பிரகாஷ் படத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸின் 51வது படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கவுள்ளார். எனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. SK 21 படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Latest Slideshows

Leave a Reply