Sivakarthikeyan Rejects Jason's Story : விஜய்யின் மகன் ஜேசன் சொன்ன கதை - நிராகரித்த சிவகார்த்திகேயன்

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும், அதை சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan Rejects Jason’s Story) நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் அமரன்  படத்தில் தற்போது நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டார். உடல் மொழி முதல் உரையாடல் உச்சரிப்பு வரை வித்தியாசமாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். படத்தின் டைட்டில் டீசரை பார்த்தாலே தெரியும்.

சிவகார்த்திகேயன், கமல் நடிப்பில் SK 21 படம் உருவாகும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும், கடந்த ஆண்டுதான் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அமரன் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அமரன் படத்தை ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமரன் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆகஸ்டில் அதிக பெரிய படங்கள் வெளியாக உள்ளதால் அமரன் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

அமரன் படத்திற்கு பிறகு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK 23 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து GOAT இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. SK 23 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனக்கு டான் படத்தை கொடுத்த சிபி சக்ரவர்த்தி இயக்கத்திலும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேசனின் கதையை நிராகரித்த சிவகார்த்திகேயன் : Sivakarthikeyan Rejects Jason's Story:

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தை தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க உள்ளார். அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், படத்தின் ஹீரோ யார் என்பது ரசிகர்களுக்கு இன்னும் தெரியவில்லை. கவின் முதல் விஜய் சேதுபதி வரை பலரின் பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால், ஜேசன் சஞ்சய் இயக்கும் இப்படத்தின் ஹீரோ யார் என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஜேசன் சஞ்சய் சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொன்னதாகவும், ஆனால் அந்த கதையில் நடிக்க சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan Rejects Jason’s Story) மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஜேசனின் கதை செட் ஆகவில்லை என்று சிவகார்த்திகேயன் ஜேசனிடம்  கூறியதாக கூறப்படுகிறது. மேலும், கமர்ஷியல் சினிமாவை மையமாகக் கொண்ட கதை என்பதால் சிவகார்த்திகேயன் நடிக்க தயங்குவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Latest Slideshows

Leave a Reply