Sivakarthikeyan Salary For Ayalan: சம்பளம் வாங்காமல் அயலான் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan Salary For Ayalan: அயலான் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் காத்திருக்கும் திரைப்படம் அயலான் ஆகும். இந்த படத்தை 24 கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.எம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பால சரவணன், ஷரத் கேல்கர், இஷா கோபிகர், பானுப்ரியா மற்றும் பல திரை நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

படத்தின் தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்தவரை, 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலன்’ இருக்கும் என்று தெரிவித்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் காமெடி ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், இப்படம் எப்போது திரைக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்தனர்.

இந்நிலையில் அயலான் படத்தின் டீசரை வெளியிட்டுள்ள படக்குழு 2024 பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “படத்தின் முதல் பாதி நகைச்சுவையாக இருக்கும். இரண்டாம் பாதி வித்தியாசமாக இருக்கும்.

20 வருடங்கள் கழித்து இந்தப் படம் வெளிவந்தாலும் நன்றாக இருக்கும். ஏனென்றால் இந்தப் படத்தின் கதை அப்படி. ஆர்.ரவிக்குமார் இயக்கிய ‘இன்று இன்று நாளை’ படம் எனக்குப் பிடிக்கும். பிறகு அவரிடம் பேசினேன். அவர் கதை சொல்வதற்கு முன்பே அவரது படத்தில் நடிக்க முடிவு செய்தேன். ஏனென்றால் அவருடைய திறமையும் அவர் பழகும் விதமும் எனக்குப் பிடித்திருந்தது.

95 நாட்களில் படப்பிடிப்பு முடிந்தது. இந்த மாதிரி வேற்றுகிரகவாசி படத்தை எடுக்க எம்ஜிஆர் முயற்சி செய்துள்ளார். அதற்கடுத்து நான்தான். நான் எம்.ஜி.ஆருக்கு அடுத்தவன் என்பது போன்ற தலைப்புகளை வெளியிட வேண்டாம் என யூடியூபர்களை கேட்டுக்கொள்கிறேன். பணப்பற்றாக் குறையால் படம் சிக்கலில் சிக்கியது. அப்போது நான் சம்பளம் வாங்காமல் நடித்து முடித்து விடுகிறேன் என்றேன்.

நான் பணத்தை விட சம்பாதித்த சொத்து இயக்குனர் ரவிக்குமார் தான். இவ்வளவு VFX , இப்படி ஒரு கதையம்சம் கொண்ட படம் இந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்ததில்லை என்று தைரியமாகச் சொல்லுவேன். அயலான் பொங்கலன்று வருவான் கவருவான்..” என்று குறிப்பிட்டார்.

Latest Slideshows

Leave a Reply