SK 23 Viral Shooting Spot Photo: வைரலாகும் முருகதாஸ், சிவகார்த்திகேயன் பட சூட்டிங் புகைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அயலான். தற்போது தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியான நிலையில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அமரன் படத்தை தயாரித்து வருகிறது.இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். காஷ்மீரில் கொல்லப்பட்ட தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். காஷ்மீர் தீவிரவாதத்தை கையாளும் படங்களில் காஷ்மீர் குடிமக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு அமரனின் முன்னோட்டங்களில் எதிரொலித்ததால் படத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SK 23 Viral Shooting Spot Photo

அமரன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஆரம்பித்தார். சர்கார், ஸ்பைடர், தர்பார் போன்ற சறுக்கலில் இருந்த முருகதாஸ் நீண்ட இடைவெளி எடுத்து இந்தப் படத்தை தொடங்கினார். எப்படியும் மெகா ஹிட் அடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் சிவகார்த்திகேயன் படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், முருகதாஸ் ஆகியோர் துணை நடிகர்களுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அமரன் படத்தில் தாடி மற்றும் மிலிட்ராகட் ஹேர்ஸ்டைலுடன் இருந்த சிவகார்த்திகேயன், இங்கு ஒழுங்கு செய்யப்படாத தாடி மற்றும் தலைமுடியுடன் சற்று வித்தியாசமாகத் தெரிகிறார். சிவகார்த்திகேயனுக்கு பிறகு இந்தியில் சல்மான் கான் நடிக்கும் ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார் முருகதாஸ்.

Latest Slideshows

Leave a Reply