SK21 First Look Teaser : SK21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து விமர்சனம் கூறிய நெல்சன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை (SK21 First Look Teaser) பார்த்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

அயலான் :

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அயலான் ஆகும். இயக்குனர் ரவிக்குமார் இயக்கிய இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அயலான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வெளியான முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 50 கோடி வசூல் செய்தது. இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

எஸ்.கே 21 :

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படமாக எஸ்.கே 21 படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராகவும், சாய் பல்லவி நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ‘விக்ரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 51வது தயாரிப்பாக இது அமைகிறது. கடந்த ஆண்டு மே மாதம் படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு, படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பின் முதல் பாதியில், சிவகார்த்திகேயன் தாடி மற்றும் நீண்ட முடியுடன் இருந்தார். மேலும் இரண்டாம் பாதி தொடங்கியவுடன் க்ளீன் ஷேவ் செய்து கல்லூரி மாணவன் போல் காட்சியளித்தார். இந்த கதாபாத்திரத்திற்காக சிவகார்த்திகேயன் தனது உடல் எடையை குறைத்துள்ளார். காஷ்மீரில் உள்ள அழகிய இடங்கள் மற்றும் சென்னை, பாண்டிச்சேரி மற்றும் அடுத்தடுத்த அட்டவணைகளுடன் முதன்மை புகைப்படம் எடுப்பது தொடங்கியது. இப்படத்திற்கு சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் ஆர்.கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

SK21 First Look Teaser - SK 21 ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்த நெல்சன் :

ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக, எஸ்.கே 21 டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டரில் உங்களை அழைத்துச் செல்வதாக உறுதியளிக்கும் காட்சிகளுக்கு தயாராகுங்கள். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டீசருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் SK 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை (SK21 First Look Teaser) பார்த்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது, SK 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை (SK21 First Look Teaser) பார்க்க வெறித்தனமாக இருப்பதாக நெல்சன் கூறியது ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளார். நெல்சன் பதிவிட்ட இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply