SL Vs BAN Asia Cup 2023 : வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதல்

SL Vs BAN Asia Cup 2023 : ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான இலங்கை அணியும் வங்காளதேச அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இலங்கையில் உள்ள மைதானத்தில் (SL Vs BAN Asia Cup 2023) இன்று நடைபெற உள்ளது. இந்த இரு அணிகளுமே எதிரும் புதிரும் அணியாகும். ஏற்கனவே முன்பு நடைபெற்ற போட்டியில் இருவரும் நாகினி டான்ஸ் ஆடி எதிரணியினரை வெறுப்பேற்றினார்கள். இதனால் இவர்கள் இருவரும் விளையாடும் போட்டி எப்போதுமே எதிர்பார்ப்புக்கு உரிய ஒன்றாகும். இதனால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெற்று விட்டு டான்ஸ் ஆட போகிறார்கள் (SL Vs BAN Asia Cup 2023) என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த இரு அணிகளிலுமே நட்சத்திர வீரர்கள் சிலர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இது இந்த போட்டியில் பெரிதும் பின்னடைவான நிகழ்வாகும். இருந்தாலும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இலங்கை அணி

இலங்கை அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்கள் சமீரா, மதுசங்கா ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். இது மட்டும் இல்லாமல் முக்கியமாக அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஹசரங்கா காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகி இருந்தார். இருந்தாலும் சி.எஸ்.கே அணியின் வீரர்கள் தீக்ஷனா மற்றும் பத்திரானா போன்ற இளம் வீரர்கள் கலக்க காத்திருக்கிறார்கள். இலங்கை அணி பொறுத்த வரை பேட்டிங் சற்று வலிமை குறைவாக உள்ளது. இதனால் கருணரத்னே, நிசாங்கா, ஷனகா ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். இதனால் பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக விளையாடினால் மட்டுமே பங்களாதேஷ் அணியை இவர்களால் எளிதில் சாய்க்க முடியும்.

வங்காளதேசம்

இதேபோன்று வங்கதேச அணியிலும் நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் காயம் காரணமாக கடைசி நேரத்தில் ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறி இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவாகும். இதனால் சீனியர் பிளேயர்கள் சகிப் ஹல் ஹசன், ரஹீம், டஸ்கின் அகமது போன்ற வீரர்கள் பொறுப்பாக விளையாடிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கடைசியாக நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்கும். இந்த இரண்டு அணிகளுமே இதுவரை 51 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 40 முறை இலங்கை அணியை வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply