SLIM Spacecraft : நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகளின் பட்டியலில் 5-வது நாடாக ஜப்பான் இடம்பெறுமா?

SLIM Spacecraft : ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் Japan Aerospace Exploration Agency (JAXA) நிலவை ஆய்வு செய்வதற்கான “ஸ்மார்ட் லேண்டர்” அல்லது “SLIM லேண்டர்” நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்ததாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 5-வது நாடாக இடம்பெறும். இதற்கு முன்னதாக இந்தியா இந்த ஆண்டு சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி வரலாற்று சாதனை  படைத்தது. SLIM விண்கலமானது (SLIM Spacecraft) நிலவின் தெற்கு மற்றும் வட துருவங்களை இணைக்கும் நீள்வட்ட நிலவு சுற்றுப் பாதையில் சுமார் 6.4 மணி நேர இடைவெளியில் நுழைக்கப்பட்டது. இதனுடைய உயரம் சந்திரனுக்கு (பெரிலூன்) மிக நெருக்கமான இடத்தில் சுமார் 600 கிலோமீட்டராகவும் சந்திரனில் இருந்து (அப்போலூன்) தொலைவில் உள்ள புள்ளியில் 4,000 கிலோமீட்டராகவும் இருக்கும்.

இன்றிலிருந்து அடுத்த மாதம் ஜனவரி நடுப்பகுதி வரை ஜப்பானிய விண்வெளி நிறுவனம் அபோலூன் புள்ளியைக் படிப்படியாக குறைக்கும். பெரிலூன் புள்ளியும் ஜனவரி 19 ஆம் தேதி 15 கிலோமீட்டர் உயரத்திற்கு குறைக்கப்படும். ஜனவரி 20-ம் தேதி நிலவில் இந்த SLIM லேண்டர் இறங்கத் தொடங்கும். SLIM Spacecraft 2023 ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ‘மூன் ஸ்னைப்பர்’ என்று அழைக்கப்படும் SLIM சந்திரனுக்கு தனித்துவமான நீள் வட்டபாதையில் சென்று கொண்டுயிருக்கிறது. வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கினால் நிலவில்  தரையிறங்கும் மிகச்சிறிய மற்றும் எடை குறைந்த விண்கலமாக SLIM இருக்கும்.

சந்திரனில் மென்மையான தரையிறக்கத்தை இலக்காகக் கொண்ட  ஜப்பானிய இரண்டாவது முயற்சி SLIM ஆகும். ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவை தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஐஸ்பேஸ் தலைமையிலான தனியார் விண்வெளி மையம் ஹகுடோ என்ற விண்கலத்தை எற்கனவே ஏவி இருந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சந்திர மேற்பரப்பில் அது விழுந்து நொறுங்கியதன் மூலம் திட்டம்  தோல்வியடைந்தது.

SLIM Spacecraft :

SLIM Spacecraft மிகச் சிறிய விண்கலமாகும் வெறும் 200 கிலோ கிராம் எடை கொண்டது. அதேசமயம் இந்தியாவின் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் சுமார் 1,750 கிலோ கிராம் எடை கொண்டது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தளத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் தரையிறங்குவதன் மூலம் துல்லியமான தரையிறங்கும் திறன்களை நிரூபிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Latest Slideshows

Leave a Reply