Smallpox, Measles Spread and Preventive Measures in TN தமிழகத்தில் பரவும் சின்னம்மை, பொன்னுக்குவீங்கி நோய்களும் தடுப்பு நடவடிக்கைகளும் - தமிழக சுகாதாரத்துறை தகவல்

இந்த 2024-ஆம் ஆண்டு குறிப்பாக ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி மே இறுதி வரையிலான காலத்தில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட மிகக் கடுமையாக இருக்கும் என வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ஆண்டு தமிழகத்தில் வழக்கத்தைவிட 5 Degree கூடுதல் வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மாநிலம் முழுவதும் தற்போது கோடை வெயிலின் முழு வீச்சு தொடங்கும் முன்பே பல்வேறு விதமான அம்மை நோய்களின் தாக்கத்துக்கு பொதுமக்கள் ஆளாகி வரு கின்றனர்.

பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் குறிப்பாக அம்மை நோய்கள், பொன்னுக்கு வீங்கி, மற்றும் சின்னம்மை பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் பொது மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மேலும் தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் (Smallpox, Measles Spread and Preventive Measures in TN) ஆனது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்பு 250 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகளவில் ஐந்து முதல் பதினைந்து வயதுவரை உள்ள சிறுவர்கள்  பொன்னுக்கு வீங்கி நோயால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி, வைரஸ் கிருமிகளால் வரும் சின்னம்மை, தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, மணல்வாரி அம்மை எனப் பல வகையான அம்மை நோய்களில்  சின்னம்மை (chickenpox), தட்டம்மை(measles), பொன்னுக்கு வீங்கி (mumps) ஆகியவை குறிப்பிடத்தக்கவை என குறிப்பிட்டுள்ளார்.

சின்னம்மை :

  • கோடை காலத்தில் சீதோஷ்ணநிலை அதிகரிக்கும்போது குப்பை, குவியல்களில் இருந்து வேரிசல்லா என்னும் வைரஸ்கள் உருவாகி காற்றில் கலந்து பரவுகின்றன.
  • வேரிசல்லா வைரஸ் மூலம் சின்னம்மை பரவக்கூடும்.
  • முதலில் சளி, இருமல், காய்ச்சல் ஆகியற்றோடு  தொடங்கி பிறகுதான் அம்மையின் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
  • அவர்களின் எச்சில் மூலம் பிறருக்கும் அது பரவ வாய்ப்புள்ளது.

சின்னம்மை நோய் தடுப்புமுறைகள் :

சின்னம்மைக்கான ஏசைக்ளோவிர்’ மருந்துகள் ஆனது அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில்போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சின்னம்மை பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.

பொன்னுக்கு வீங்கி நோய் :

மம்ப்ஸ்  என்னும் வைரஸ்  மூலம் வரும் பொன்னுக்கு வீங்கி தொற்று முக்கியமாக காது மற்றும் தாடைக்கு இடையில் உள்ள ஒவ்வொரு கன்னத்தின் பின்புறத்திலும் அமைந்துள்ள உமிழ்நீர் சுரப்பிகளை பாதித்து  வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது.

இந்த மம்ப்ஸ் வைரஸ் தாக்கிய 14-18 நாட்களுக்குப் பிறகுதான்  இதன் அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி, பசியின்மை, பலவீனம், மெல்லும் போது அல்லது விழுங்குவதில் வலி மற்றும் கன்னங்கள் வீங்குதல் ஆகியவை தோன்றும். பாதிக்கப்பட்டவரின் உமிழ்நீர், தும்மல் அல்லது இருமல் மற்றும் பாதிக்கப்பட்டவரின்  பாத்திரங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம்  ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எளிதில் பரவுகிறது.

பொன்னுக்கு வீங்கி நோய் தடுப்புமுறைகள் :

  • இப்யூபுரூஃபன் அல்லது பாராசிட்டமால் போன்ற வலி நிவாரணிகளைப் பயன்படுத்தலாம்.
  • வீங்கிய இடத்தில் குளிர்ந்த பொதிகளைப் பயன்படுத்துவது உதவியாக இருக்கும்.
  • எளிய உணவை வழங்குதல், திரவங்களை அதிகப்படுத்துதல்
  • நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவர்கள்  தம்மை தனிமைப்படுத்திக் கொண்டாலே பொன்னுக்கு வீங்கி பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு வாரத்தில் தானாகவே அது சரியாகிவிடும்.
  • MMR (தட்டம்மை-சளி-ரூபெல்லா) மிகவும் பயனுள்ள தடுப்பூசி.  சளியைத் தடுக்கும். பொதுவாக MMR இன் இரண்டு டோஸ்கள் 12-15 மாத வயதிலும், இரண்டாவது 4-6 வயதில் அல்லது 11-12 வயதுக்கு முன்பு கொடுக்கப்பட்டிறிந்தால் நல்லது.

பொதுவான தடுப்புமுறைகள் :

  • கோடை காலத்தில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
  • கோடையில் பழங்களை அதிகம் சாப்பிட  வேண்டும்.
  • கைகளை உணவு உண்பதற்கு முன் மறக்காமல் நன்கு கழுவ வேண்டும்.
  • தினசரி 1 முறை அல்லது 2 முறை குளிக்க வேண்டும்.
  • சளி,காய்ச்சலுக்கு மருத்துவரை அணுக வேண்டும்.
  • வீட்டில் யாருக்காவது இவ்வகை நோய்த்தொற்று இருந்தால் அவர்கள் உடைகளை தனியாக தினசரி துவைக்க வேண்டும்.
  • மேற்கண்ட நோய்களுக்குத் குழந்தைப் பருவத்திலே தடுப்பூசிகள் போட்டு விட்டால் எப்போதும் இந்நோய்கள் வராது.

Latest Slideshows

Leave a Reply