Snoring Lab : குறட்டை பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையை தொடர்ந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும்  குறட்டை பிரச்னையை தீர்ப்பதற்கான ஆய்வகம் (Snoring Lab) ஒன்று தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

நிம்மதியைக் கெடுக்கும் குறட்டை சத்தம் :

மனிதர்களுக்கு தூக்கத்தில் குறட்டை வரும். அந்த குறட்டை சத்தம் நார்மலாக இருந்தால் அருகில் தூங்குபவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. அந்த குறட்டை சத்தம் அளவுக்கு அதிகமாக வரும்போது அருகில் தூங்குபவர்களுக்கு மற்றும் மற்றவர்களுக்கு எரிச்சல் தரும். மேலும் குறட்டை சத்தம் மற்றவர்களைத் தூங்க முடியாத தொந்தரவுக்கும் ஆளாக்கும். வாழ்க்கையில் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகளை குறட்டை விடும் பலரும் சந்திக்கின்றனர். குறட்டை விடுபவர்கள் மிகுந்த மன உளைச்சல் மற்றும் வெளியில் சொல்ல முடியாத கூச்சத்துக்கும் ஆளாகிறார்கள். ஒருவருடைய நிம்மதியைக் கெடுக்கக் கூடியதாக குறட்டை அமைகிறது. இந்நிலையில் குறட்டை பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆய்வகம் சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது.

Snoring Lab - தஞ்சாவூர் புதிய ஆய்வகம் குறித்து மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன் உரை :

தஞ்சாவூர் புதிய ஆய்வகம் குறித்து மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன், “அதிநவீன பிரான்கோஸ்கோபி (Bronchoscopy) என்கிற மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவியுடன் கூடிய உறக்க ஆய்வகம் (Snoring Lab) ஆனது தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப் பிரிவில் தொடங்கப்பட்டுள்ளது. உடல் பருமன் காரணமாக நிறையப் பேருக்கு குறட்டைச் சத்தம் வரும். மேலும் தொண்டையில் சதை வளருதல் காரணமாகவும் வரும். இதனால் அவர்களுக்கு தூக்கமின்மை நோய் ஏற்பட்டு அவர்களது பகல் நேரச் செயல்பாடு குறைதல், ரத்த அழுத்தம், மற்றும் சர்க்கரை சத்து பிரச்னைகள் உருவாகும்.

உடலில் ஏற்படக்கூடிய இந்த மாற்றங்களைக் கண்காணிப்பதற்கான பரிசோதனைக் கூடமாக இந்த உறக்க ஆய்வகம் ஆனது செயல்படும். குறட்டை வரும்போது உடலில் ஏற்படும் மாற்றம், ஆக்ஸிஜன் அளவு குறைவது மற்றும் இதயத்தில் மாறுபாடு போன்றவற்றை 6 மணி நேரம் வரை பதிவு செய்யப்படும்.  ஒருவர் தூங்கும் போது மட்டுமே பரிசோதனை செய்யப்படும். அதனால் ஒரு நாளைக்கு ஒருவர் மட்டுமே பரிசோதிக்கப்படுவர். ஆய்வகத்தில் பரிசோதனை செய்து எதனால் குறட்டை வருகிறது என்பதை அறிந்து, பரிசோதனை முடிவை வைத்து முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் குறட்டையிலிருந்து தீர்வுக்கு வழி காணலாம். இந்தப் பரிசோதனை இரவு நேரத்தில் தூங்கும்போது மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply