ஆதித்யா விண்கலம் ஆய்வு செய்து பூமிக்கு அனுப்பிய Solar Storm Data

சூரிய புயல் தாக்கத்தால் பூமியில் ஏற்பட்ட மாறுதல்கள் :

சூரியன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் ஒரு விண்மீன். ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் சூரியன் முழுவதும் நிரம்பி உள்ளது. அதன் வயது 4.5 பில்லியன் வருடங்கள் ஆகும். சூரியனுக்கும் பூமிக்குமான தொலைவு சுமார் 150 மில்லியன் கி.மீ. ஆகும். 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரிய சுழற்சியானது நிகழ்வது வழக்கம். இந்த சமயத்தில் சூரிய புயல்கள் மற்றும் சூரிய எரிப்புகள் போன்ற செயல்கள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. சூரியனிலிருந்து வெளிப்படும் இந்த சூரிய புயல் ஆற்றல் ஆனது சில சமயம் குறைவாகவும் மற்றும் சில சமயம் அதிகமாகவும் வெளிப்படுகிறது. இதுதான் சூரியப்புயல் என்று அழைக்கப்படுகிறது. சூரிய புயலின் காரணமாக சூரியனின் மேற்பகுதியில் நிகழும் மின்காந்த வெடிப்புகள் ஆனது பூமியை கடந்து செல்லும்போது, அதன் விளைவுகளை பூமி உணர்வதையே சூரியப் புயலின் தாக்கம் எனப்படுகிறது. சூரியனுள்ள ஒரு ஹைட்ரஜன் ஆனது  மற்றொரு ஹைட்ரஜனுடன் மோதிக்கொள்வதால்  சூரியனில் ஒரு வெப்பசக்தி வெளிப்படுகிறது.

இவ்வாறு இரு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் போது ஹீலியம் ஆனது உற்பத்தியாகிறது. இந்த சூரிய காந்தப் புயல் காரணமாக பூமியில் செயல்பாட்டில் இருக்கும் பல்வேறு அதிர்வெண் வரிசைகளில் இடையூறுகள் ஆனது ஏற்படுகிறது. இதனால் விமானங்கள், கப்பல் போக்குவரத்து, GPS மற்றும் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு உள்ளிட்டவை கடுமையான பாதிப்புக்கு ஆளாகும். இது மின்சார கட்டமைப்பு, ரேடியோ மற்றும் சாட்டிலைட்டு தொடர்புகள் ஆகியவற்றில் கடுமையாக தாக்கங்களை ஏற்படுத்தும். இந்த சூரிய புயல் காந்த மண்டலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை ஆகும்.

Solar Storm Data -ஆதித்யா விண்கலம் சூரிய புயலை ஆய்வு செய்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்பி உள்ளது :

இந்த 2024 ஆம் ஆண்டில் மே மாத துவக்கத்திலிருந்து சூரிய புயலானது வீசி வருகிறது. சமீபத்தில் மே 11ம் தேதி சூரியனிலிருந்து வெளிப்பட்ட புவிகாந்த புயல் (Geomagnetic Storm) அதிவேகத்தில் வீசியது. இது கடந்த 2003-க்கு பிறகு ஏற்பட்ட கடுமையான சூரியபுயல் ஆகும். இந்த சூரியபுயல் ஆனது சூரியனுக்கு மேல் AR 13664 என்ற பகுதியிலிருந்துதான் மிக அதிகமாக தோன்றியது. கடந்த 2003-க்கு பிறகு ஏற்பட்ட கடுமையான சூரியபுயல் இது. இதனால் தகவல்தொழில்நுட்பம் GPS பாதிப்பு ஏற்பட்டது. சூரியனிலிருந்து வெளிப்படும் சூரியகாற்றில் பொதுவாக பல்வேறு விதமான மின்னேற்றம் கொண்ட துகள்கள், எலக்ட்ரான், புரோட்டான், ஆல்ஃபா கதிர்கள் போன்ற கலவைகள் காந்தபுலம் கொண்டவையாக (Solar Storm Data) இருக்கும். ப்ளாஸ்மா என்று சொல்லப்படும் இந்த கலவை ஆனது சூரியபுயலின் போது அதீத வேகத்துடன் செரிவுடனும் வெளிவரும்.

பூமியின் மேற்புறம் உள்ள வளிமண்டலத்தின் மேற்புறம் அயனோஸ்பியர் என்ற அயனிமண்டலம் இருக்கிறது. பூமியின் மீது சூரியபுயல் மோதும் பொழுது, அயனி மண்டலம் ஆனது சூரியபுயலை தடுக்கிறது. இந்த தடையையும் மீறி சூரியபுயலின் சில கதிர் துகள்கள் பூமிக்குள் நுழையும் பொழுது, உயர் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகளுடன் ப்ளாஸ்மா ஆனது இணைந்து வினையாற்றும். இதன் விளைவாக மே 11ம் தேதி இரவில் துருவ ஒளியானது பல பகுதிகளில் வெளிப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மே 11ம் தேதி இரவில் சக்தி வாய்ந்த சூரிய புயல் பூமியைத் (Solar Storm Data) தாக்கியுள்ளது. இதை டாஸ்மானியா முதல் பிரிட்டன் வரையில் வானத்தில் ஒளிக் காட்சிகளாக பலரும் பார்த்துள்ளனர். இந்த சூரியபுயலால் எந்த செயற்கைகோளுக்கும் பாதிப்பில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 1859 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூரியப்புயலே பூமியினைத் தாக்கிய மிகப்பெரிய புவிக்காந்தப் புயல். இந்த சூரியப்புயல் பூமியின் காந்தசக்தியினை பாதித்தது. அச்சமயத்தில் டெலிகிராம் தொடர்புகள் ஆனது பாதிக்கப்பட்டன.

Latest Slideshows

Leave a Reply