Sorgavaasal Movie Review : சொர்க்கவாசல் படத்தின் திரை விமர்சனம்

சிறைச்சாலையை மையமாக வைத்து தமிழில் ஒரு சில படங்களே வந்துதிருக்கிறது. இந்நிலையில் அறிமுக இயக்குநரான சித்தார்த் விஸ்வநாத் சிறைச்சாலை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சொர்க்கவாசல் திரைப்படத்தின் (Sorgavaasal Movie Review) திரை விமர்சனத்தை பார்க்கலாம்.

சொர்க்கவாசல் படத்தின் கதை

போலி வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு செல்லும் பார்த்திபன் (RJ பாலாஜி) சிறைச்சாலை என்னும் நரகத்தில் என்ன ஆனார் என்பதே சொர்க்கவாசல் படத்தின் கதையாகும். சாலையின் ஓரத்தில் ரோட்டுக்கடை உணவகம் நடத்தி வரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் தான் பார்த்திபன். சாலையில் எதிர்பாராத சூழலில் அரசு அதிகாரி ஒருவரை கொலை செய்யும் கும்பல் அந்த கொலைப்பழியை பார்த்திபன் மீது சுமத்துகின்றனர். இது ஒருபுறம் இருக்க இனி எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டேன் என சிறையில் திருந்தும் முயற்சியில் இருக்கிறார் சிகா (செல்வராகவன்). சிறைத்துறை அதிகாரியாக இருக்கும் கட்டபொம்மன் (கருணாஸ்) தான் ஏங்கும் பதவியை வேறொரு நபருக்கு கிடைத்துவிட்டதால் கடுப்பில் இருக்கிறார். சொர்க்கவாசல் படத்தின் பிரதான முகங்கள் இவர்கள் 3 பேரும் தான். சிறைச்சாலையில் ஒரு மரண சம்பவம் நடக்க அது வன்முறையாக வெடிக்கிறது. இந்த வன்முறை நரகத்தில் இருந்து வெளியேற நினைப்பவர்கள் என்ன நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள் என்பதே (Sorgavaasal Movie Review) படத்தின் மீதி கதையாகும்.

RJ பாலாஜியின் நடிப்பு

ரன் பேபி ரன் திரைப்படத்திற்கு பிறகு RJ பாலாஜி மீண்டும் ஒரு இறுக்கமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயலாமையால் நொடிந்து போகும் காட்சிகளில் சிறப்பாக RJ பாலாஜி நடித்திருக்கிறார். ஆனால் மற்ற காட்சிகளில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தியிருக்கலாம். கட்டபொம்மனாக நடித்துள்ள கருணாஸ் இந்த படத்தின் மூலம் சிறந்த குணச்சித்திர (Sorgavaasal Movie Review) நடிகராக உருவாகியிருக்கிறார். செல்வராகவனின் (சிகா) முன்கதை முதல்பாதியில் கார்ட்டூனில் சொல்லப்படுகிறது. வில்லனுக்கான எந்த மடலேஷனும் இல்லாமல் முதிர்ச்சியடைந்த 7ஜி பட ரவி கிருஷ்ணாவாகவே படம் முழுவதும் வருகிறார். படத்தில் விசாரணை அதிகாரியாக வரும் நட்டிக்கு நெஞ்சு எரிச்சலுடன் பேசும் கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இது எதற்காக என்பதை படத்தில் கடைசி வரை புரிந்துகொள்ள முடியவில்லை.

சொர்க்கவாசல் படத்தின் விமர்சனம் (Sorgavaasal Movie Review)

தமிழ் சினிமாவில் சிறைச்சாலையை மையமாக கொண்டு சில படங்கள் மட்டுமே வந்திருக்கிறது. சிறைச்சாலை வாழ்க்கை, சிறைச்சாலையில் இருக்கும் மனிதர்களின் பிரச்சனைகள் என வித்தியாசமான ஒன்லைனில் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத். சொர்க்கவாசல் படத்தின் மூலம் அதிகார வர்க்கத்தின் சிஸ்டத்தில் உண்மை மற்றும் நேர்மைக்கு எந்த மதிப்பும் இல்லை என்ற கருத்தானது அனைவரையும் கவனிக்க வைக்கிறது. சொர்க்கவாசல் படத்தில் கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை த்ரில்லர் படத்துக்குத் தேவையான ஹைப்பைத் தருகிறது. செல்வராகவன் வித்தியாசமான திரைக்கதைக்கு ஏற்ப இன்னும் கவனமாக எடிட் செய்திருக்கலாம். படத்தில் சில கதாபாத்திரங்கள் முன்பே வருவதால் கதையின் ஆர்வத்தை (Sorgavaasal Movie Review)  குறைக்கிறது. நரகத்தில் ராஜாவாக இருக்கப்போகிறாயா இல்லை சொர்க்கத்துக்காக காத்திருக்கப் போகிறாயா என்னும் கேள்வியுடன் தொடங்கும் சொர்க்கவாசல் திரைப்படம் அதற்கான பதிலை தரும் முன்னரே நம்மை மூச்சிறைக்க வைத்துவிடுகிறது.

Latest Slideshows

Leave a Reply