Sorgavaasal Teaser : சொர்க்கவாசல் திரைப்படத்தின் டீசர் வெளியீடு

  • சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி (Sorgavaasal Teaser) நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கடந்த 2010 ஆம் ஆண்டு ரேடியோ ஜாக்கியாக அறிமுகமானார். அதன் பிறகு 2013 முதல் தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். 2015ல் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக நகைச்சுவை வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து புகழ், ஜில் ஜங் ஜக், தேவி போன்ற படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான LKG திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். 2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்குகிறார்.

Sorgavaasal Teaser

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சிங்கப்பூர் சலூன். இப்படத்திற்கு பிறகு தற்போது அவர் நடித்து வரும் படம் சொர்க்கவாசல். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன் இயக்கியுள்ளார். செல்வராகவன், பாலாஜி சக்திவேல், கருணாஸ், நட்டி, சானியா ஐயப்பன், அந்தோனி தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் படத்திற்கு இசையமைத்துள்ளார். எழுத்தாளர் தமிழ் பிரபா, சித்தார்த் விஸ்வநாத், அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளனர். இந்நிலையே (Sorgavaasal Teaser) சொர்க்கவாசல் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கு முன், ஆர்.ஜே.பாலாஜியின் படங்களில் பெரும்பாலும் நகைச்சுவைக் கதைகள் இருந்தன. ரன் பேபி ரன் திரைப்படம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக த்ரில்லர் ஜானரில் அமைந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோலவே சொர்க்கவாசல் திரைப்படமும் ஆர்.ஜே.பாலாஜி இதுவரை நடிக்காத கதைக்களமாக அமைந்துள்ளது. முழுக்க முழுக்க சிறையில் நடக்கும் இப்படம் ரத்தம் சிந்தும் கேங்ஸ்டர் டிராமாவாக மாறுவதை இந்த டீசரில் பார்க்க முடிகிறது. இப்படத்தில் பாலாஜி சக்திவேல், செல்வராகவன், கருணாஸ் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் வித்தியாசமான வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply