South Africa vs Australia 3rd T20 : தென்னாப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்த ஆஸ்திரேலியா

South Africa vs Australia 3rd T20 : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 3-0 என கைப்பற்றி சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியா :

1987, 1999, 2003, 2007, 2015 என 5 முறை வெற்றி பெற்ற அணி ஆஸ்திரேலியா. அது தான் அதிக முறை வெற்றி பெற்ற அணி ஆகும். ஐ.சி.சி தொடருக்கு வரும்போது ஆஸ்திரேலிய அணி வேறு வடிவில் வரும். அந்த வகையில், உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், சீனியர் வீரர் ஒருவர் கூட இல்லாமல் டி20 தொடரை கைப்பற்றி விடுவோம் என தென் ஆப்பிரிக்கா மிரட்டியுள்ளது.

நேற்று இரவு நடந்த 3வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. டொனவன் பெரேரா 48 ரன்ளையும், ஹென்ரிக்ஸ் 42 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்களையும் பெற்றனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஷேன் அபோட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷார்ட் டக் அவுட்டாக, அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த ஹெட் – இங்கிலிஸ் கூட்டணி தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சிதறடித்தது. சிறப்பாக விளையாடிய இங்லிஸ் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நிலையில், மறுபுறம் அபாரமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார்.

South Africa vs Australia 3rd T20 - தொடரை கைப்பற்றியது :

இறுதியாக மார்கஸ் ஸ்டோனிஸ் 21 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் டி20 தொடரை(South Africa vs Australia 3rd T20) ஆஸ்திரேலிய அணி 3-0 என கைப்பற்றியது. தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்திய ஆஸ்திரேலியா உலகக் கோப்பையில் ஆபத்தான அணியாக பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply