SP Balasubrahmanyam Road : மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் சாலை திறப்பு

இந்திய சினிமாவின் முன்னணி பாடகராக இருந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் கொரோனா தொற்று காரணமாக செப்டம்பர் 25, 2020 அன்று காலமானார். அவரது மரணம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள், கிராமங்கள் என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் சாலை (SP Balasubrahmanyam Road) திறக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை (SP Balasubrahmanyam Road)

சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இந்தியத் திரையுலகின் ஆற்றல் மிகு அடையாளம். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய ‘பாடும் நிலா’ என்று தனது (SP Balasubrahmanyam Road)  எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மறைந்த பின்னணிப் பாடகர் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவரின் பெயரை அவர் வாழ்ந்த நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள், கோரிக்கை விடுத்தனர். அதை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின், காம்தார் நகர் முதன்மை சாலைக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை’ என பெயர் (SP Balasubrahmanyam Road) சூட்ட உத்தரவிட்டார். இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியான நிலையில், நுங்கம்பாக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலைக்கான வழிகாட்டி பலகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் அவர் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, அவரது குடும்பத்தினருக்கு நினைவு பரிசு (SP Balasubrahmanyam Road)  வழங்கப்பட்டது. காற்றில் கானமாக வாழ்ந்துகொண்டிருக்கும் SPB சாரின் புகழ் ஓங்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

எஸ்.பி.பி. சரண்

SP Balasubrahmanyam Road - Platform Tamil

இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியன் மகன் எஸ்.பி.பி.சரண் பேசும்போது, இது எங்களுக்கு, எங்கள் குடும்பத்துக்கோ கிடைத்த அங்கீகாரம் என்று (SP Balasubrahmanyam Road) சொல்லமாட்டேன். எஸ்.பி.பி.ரசிகர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம். அப்பாவுக்கு நினைவிடம் கட்டி வருகிறோம். அங்கு சென்றால் அவருடைய புகைப்படம் முதல் அவருக்கு கிடைத்த விருதுகள் வரை அனைத்தையும் பார்க்கலாம். அவரது ரசிகர்களுக்காக இதையெல்லாம் செய்கிறோம். அவரது பாடலை விரும்பாதவர்கள் என யாருமே இல்லை. அப்பாவின் பாட்டு எல்லா கட்சிக்காரர்களுக்கும் பிடிக்கும்.

இந்த சாலைக்கு அப்பா பெயர் சூட்டப்பட்டது ரொம்ப மகிழ்ச்சி. இந்த சாலையில் அவர் வாக்கிங் சென்றுள்ளார். நாங்கள் கிரிக்கெட் விளையாடும்போது மாடியில் இருந்து அம்பயரிங் செய்துள்ளார். கால்வாய் அடைக்கப்பட்டாலும் அப்பாவும் நானும் சேர்ந்து தடுப்பை எடுத்து விடுவோம். அப்பாவுக்கு இந்த ஏரியா (SP Balasubrahmanyam Road) மிகவும் பிடிக்கும். இதுவும் பாதுகாப்பானதும் கூட. அதனால்தான் நாங்கள் வேறு எங்கும் செல்லவில்லை என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Latest Slideshows

Leave a Reply