Space X Contract With Airtel And Jio : Space X இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS-ன் டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஏற்றது

எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான Space X ஸ்டார்லிங் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை செயல்படுத்துவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெற ஸ்பேஸ் எக்ஸ்க்கு மத்திய அரசு டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை விதித்து இருந்தது. இதை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது. ஆனால் கடந்த மாதம் ஸ்பேஸ் எக்ஸ் விதிகளுக்கு உட்பட்டு கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது முதற்கட்டமாக Airtel மற்றும் Jio உடன் (Space X Contract With Airtel And Jio) ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

Airtel உடனான ஒப்பந்தம்

தற்போது முதற்கட்டமாக ஸ்பேஸ் எக்ஸ் சேவையை இந்தியாவிற்கு கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனமான Airtel- உடன் ஒரு ஒப்பந்தத்தில் ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டுள்ளது. இந்த செய்தியை Airtel நிறுவனம் (Space X Contract With Airtel And Jio) நேற்று அறிக்கை மூலம் அறிவித்து உள்ளது. இது இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உரிய ஒப்பந்தம் ஆகும். ஸ்டார்லிங்க் உபகரணங்களை Airtel-ன் சில்லறை விற்பனைக் கடைகளில் வழங்குவது குறித்து ஆராயப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Reliance-ன் Jio நிறுவனத்துடனான ஒப்பந்தம் (Space X Contract With Airtel And Jio)

Space X Contract With Airtel And Jio - Platform Tamil

தற்போது Airtel-ஜ தொடர்ந்து அதன் போட்டியாளரான Reliance-ன் Jio நிறுவனம் ஸ்டார்லிங்க் உடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. Jio நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “இது இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்பனை (Space X Contract With Airtel And Jio) செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உரிய ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் ஆனது Jio மற்றும் ஸ்பேஸ்எக்ஸ், Jio-வின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார்லிங் எவ்வாறு உதவ முடியும் என்பதையும், ஸ்டார்லிங் சேவைகளை நேரடியாக நுகர்வோர் மற்றும் வணிகங்களின் பயன்பாட்டுக்கு எவ்வாறு கொண்டு சேர்க்க முடியும் என்பதையும் ஆராய வழிவகுக்கும். மேலும் Jio ஆனது தனது சில்லறை விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங் உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல், தனது Jio வாடிக்கையாளர்களுக்கு சேவையை தந்து அதனை செயல்படுத்துவதை உறுதி செய்ய ஒரு கட்டமைப்பை நிறுவ உள்ளது. இந்த ஒப்பந்தம் ஆனது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கு நம்பகமான இணையம் முழுமையாக அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஜியோவின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply