SPY Teaser Release Date: புது டெல்லியில் வெளியாகும் "ஸ்பை" பட டீசர்

ஈடி எண்டர்டெயின்மெண்ட்ஸ் மூலமாக கே. ராஜசேகர் தயாரித்து. பிரபல பட தொகுப்பாளரான கேரி பிஎச் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஸ்பை’ ஆகும். மேலும் நிகில் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் மற்றும் சானியா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஆர்யன் ராஜேஷ், அபினவ் கோமதம், மகரந்த் தேஷ், நித்தின் மேத்தா, சோனியா நரேஷ், ரவி வர்மா என பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பகக்லா மற்றும் சந்திரசேகர் இணைந்து இசைமைத்துள்ளனர்.

பான் இந்திய திரைப்படமான ‘ஸ்பை’ மறைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசியங்களை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. “நீங்கள் எனக்கு ரத்தத்தை கொடுங்கள் நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்” என வீரர் சுபாஷ் சந்திர போஸின் வீர முழக்கத்தை இப்படத்தின் தயாரிப்பாளர் அண்மையில் வெளியிட்ட காணொளியில் இடம் பெற்று பெரும் கவனத்தை ஈர்த்தது.

டீசர் வெளியீடு (SPY Teaser Release Date)

டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஒன்று நடைபெறவிருக்கிறது. அதாவது ‘ஸ்பை’ படத்தின் டீசர் வரும் 15ம் தேதி புதுடெல்லி கர்தவ்யா பாதையில் அமைந்துள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாதையில் வெளியாகும் முதல் பட டீசர் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கி இருக்கிறது. யாரும் எதிர்பாராத படைப்பாக அமைந்திருக்கிறது.

ஆக்சன் கலந்த த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் கே ராஜசேகர் செட்டி எழுதியுள்ளார். மேலும் இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

Latest Slideshows

Leave a Reply