SSC Notification 2024 : மத்திய அரசில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு அஸ்ஸாம் ரைபிள்ஸ் ஆட்சேர்ப்பு தேர்வில் மத்திய ஆயுதக் காவல் படைகளில் கான்ஸ்டபிள் (பொது வேலை), எஸ்எஸ்எஃப் மற்றும் ரைபிள்மேன் (பொது வேலை) ஆகிய பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வு தேதிகள் (SSC Notification 2024) வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல், ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான (சிஜிஎல்) தேர்வு தேதிகள் எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

SSC Notification 2024

தேர்வு தேதிகள்

ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான (சிஜிஎல்) தேர்வுகள் அடுத்த வரும் ஜனவரி மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன. இதேபோல், எஸ்எஸ்எஃப், கான்ஸ்டபில் மற்றும் பிற பணிகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் (SSC Notification 2024) நடைபெற உள்ளன. குறிப்பாக, பிப்ரவரி 4ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலும், பிப்., 17ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. அதேபோல் GD தேர்வு பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன. அவர்களுக்கான ஹால் டிக்கெட் ஜனவரியில் வெளியிடப்படும்.

13 மொழிகளில் தேர்வு

இந்த தேர்வுகள் அனைத்தும் கணினி வழியில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வானது ஆங்கிலம், ஹிந்தி மற்றும் 13 பிராந்திய மொழிகளில் நடைபெறும். தமிழ், மலையாளம், அஸ்ஸாமி, உருது, தெலுங்கு, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, குஜராத்தி, கன்னடம், மணிப்பூரி, கொங்கனி ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெற (SSC Notification 2024) உள்ளது. இதைத் தொடர்ந்து உடல் தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

காலிப்பணியிடங்கள்

எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) ஆண்களுக்கு 13306 காலியிடங்களும், பெண்களுக்கு 2348 காலியிடங்களும் என மொத்தம் 15,654 காலியிடங்கள் (SSC Notification 2024) உள்ளன. அதேபோல், சிஐஎஸ்எஃப் பிரிவில் 7,145 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. CRPF பிரிவில் 11541 பணியிடங்களும், SSP பிரிவில் 819 இடங்களும் காலியாக உள்ளன. ஐடிபிபி பிரிவில் 3017 இடங்களும், ஏஆர் பிரிவில் 1248 இடங்களும், எஸ்எஸ்எஃப் பிரிவில் 35 இடங்களும், என்சிபி பிரிவில் 22 இடங்களும் உள்ளன. ஆக மொத்தம் 39481 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் தொடர்பான விவரங்களை (https:ssc.gov.in/) என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

Latest Slideshows

Leave a Reply