SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வு வாரியம் Staff Selection Commission (SSC) தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு தகுதியில் மத்திய ஆயுதப்படை போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் எல்லை பாதுகாப்பு படை (Border Security Force – BSF) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்களை (SSC Recruitment 2024) நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கான்ஸ்டபிள் பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 14.10.2024-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

SSC Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : மத்திய அரசின் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் (Constable And Sepoy) பணியிடங்களுக்கு மொத்தம் 39,481 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த கான்ஸ்டபிள் (Constable And Sepoy) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  3. வயதுத் தகுதி (Age) : இந்த கான்ஸ்டபிள் (Constable And Sepoy) பணியிடங்களுக்கு 01.01.2024 அன்று வரை 18 வயது முதல் 23 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சம்பளம் (Salary) : இந்த கான்ஸ்டபிள் (Constable And Sepoy) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.21,700/- முதல் 69,100/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த கான்ஸ்டபிள் (Constable And Sepoy) பணியிடங்களுக்கு (SSC Recruitment 2024) கணினி வழி தேர்வு (CBT) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வானது 13 வட்டார மொழிகளில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த கான்ஸ்டபிள் (Constable And Sepoy) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

  7. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த கான்ஸ்டபிள் (Constable And Sepoy) பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும்.

  8. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்த கான்ஸ்டபிள் (Constable And Sepoy) பதவிகளுக்கு (SSC Recruitment 2024) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 14.10.2024 ஆகும்.

  9. மேலும் விவரங்கள் அறிய : https://ssc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ  இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply