St Britto's College Boxing Competition : St.Britto's College மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி | முக்கிய அமைச்சர்கள் பங்கேற்பு

St Britto’s College Boxing Competition : சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள (St.Britto’s College) செயின்ட் பிரிட்டோ கல்லூரியில் நடைபெற உள்ள குத்துச்சண்டை போட்டிக்கு சிறப்பு விருந்தினராக “நம்ம Family Builder & Developer Pvt.Ltd” Founder & Chairman திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் பங்கேற்க உள்ளார்.

குத்து சண்டை என்றால் என்ன?

குத்துச்சண்டை என்பது ஒரு சண்டை விளையாட்டு ஆகும். குத்துச்சண்டை என்பது ஒரே எடை வகுப்பைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் கையுறைகள் மற்றும் சில பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு சண்டையிடுவது ஆகும். ஒருவர் தனது எதிராளியைத் தாக்கி வீழ்த்தினால், விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழுந்திருக்கவில்லை என்றால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார். அல்லது போட்டியின் போது ஒரு வீரரின் உடல் நிலைமை தொடர்ந்து போட்டியிட முடியாத நிலைமை வந்தாலும், எதிர்த்து நின்ற மற்ற சண்டையாளார் வெற்றி பெறுவார். இரண்டு வீரர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுகளுக்கு தொடர்ந்து போராடி, அதன் பிறகும் நிலைத்து நின்றால் அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் நடுவார்களால் தீர்மானிக்கப்படுவார். குத்துச்சண்டை ஒரு ஒலிம்பிக் விளையாட்டாகும்.

குத்துச்சண்டை என்பது நாகரிகம் போலவே பழமையான விளையாட்டாகும். இது பயமுறுத்தும் அதே சமயம் உற்சாகமளிக்கிறது, கடினமானது ஆனால் பலனளிக்கும். குத்துச்சண்டை தற்போதைய பாணியாக உருவாகும் வரை பயங்கரமானதாகவும், அபாயகரமானதாகவும் இருந்தது. குத்துச்சண்டை இன்று மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. காலப்போக்கில் இந்த விளையாட்டுக்கு அதிக அதிகாரப்பூர்வ முறையீட்டைக் கொடுத்த பல சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கொண்டு அரசே இந்த விளையாட்டை ஏற்று நடத்தி வருகிறது.

St Britto's College Boxing Competition :

இந்நிலையில் இன்று சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள (St.Britto’s College) கல்லூரியில் மாநில அளவிலான குத்துச்ண்டை போட்டி (St Britto’s College Boxing Competition) இன்று 28/10/2023 மற்றும்  29/10/2023 ஆகிய இரண்டு நாட்கள் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், “நம்ம Family Builder & Developer Pvt.Ltd” Founder & Chairman திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

திரு.பொன்னுசாமி கார்த்திக், பல வெற்றிகளை பேசும் வெற்றியின் சொந்தக்காரர்கள் பலர், அதில் இவர் தனி இடம், சென்னை கூடுவாஞ்சேரியில் ‘ரியல் எஸ்டேட்’ ராஜ்ஜியத்தை உருவாக்கிய தனி நபரின் சாம்ராஜ்ஜியம் பல ஆயிரம் குடும்பங்களின் நம்பிக்கை நட்சத்திரம் இளம் தொழில் அதிபர் “NFBD Group Pvt Ltd Founder & Chairman திரு.பொன்னுசாமி கார்த்திக். இவருடைய குறிக்கோள் மற்றவர்கள் பின்பற்றுவதற்கான போக்குகளை அமைப்பது தான் இவரை பொறுத்தவரை வெற்றி என்பது முடிவில்லா செய்யும் செயலாகும். இவர் தொழில் துறையில் அறிவையும் நுணுக்கத்தையும் கற்றுத் தேர்ந்தவர். ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி தொகையும், இளைஞர்களை சாதனையாளர்களாக உருவாக்கவும் அது அதிகரிக்கவும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார். அவருடைய வருமானத்தில் பெரும்பங்கு சிறந்த திறமையாளர்களை ஊக்குவிக்க செலவிடுவார்.

இவ்வாறு பல திறமைகளை கொண்டு “நம்ம Family Builder & Developer Pvt.Ltd” நிறுவனத்தை கையாளும் இவர்,  சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள (St.Britto’s College) செயின்ட் பிரிட்டோ கல்லூரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான குத்துச்சண்டை (St Britto’s College Boxing Competition) போட்டிக்கு, தங்களுடைய நிறுவனம் சார்பாக Sponsorship செய்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊரக தொழில் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் திருமதி.பிரியா ராஜன் ஆகியோர்களுடன் இணைந்து “நம்ம Family Builder & Developer Pvt.Ltd” Founder & Chairman திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் சிறப்பு விருந்தினராக  பங்கேற்க உள்ளார். மாநில அளவிலான குத்துச்ண்டை போட்டி இன்று 28/10/2023 மற்றும் 29/10/2023 ஆகிய இரண்டு நாட்கள் மிக பிரமாண்டமாக நடைபெற (St Britto’s College Boxing Competition) உள்ளது.

Latest Slideshows

Leave a Reply